வாக்குத்தத்தச் செய்தி – நிறைவானது வரும்போது… – போதகர் ஆல்வின் தாமஸ் – Mar., 2019

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,

இந்த மாதம் கர்த்தர் கொடுத்த விசேஷித்த தீர்க்கதரிசன வார்த்தையை உங்களுக்கு எழுதுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஜெபத்துடன் கருத்தாய் வாசித்து, வாக்குத்தத்த வசனங்களை அறிக்கையிட்டு சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

நிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்துபோம். (1 கொரிந்தியர் 13:10)

உலகமானது தள்ளப்பட்ட தூதர்களால் ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் யாரும் நிவர்த்தி செய்ய முடியாத ஒரு குறைக்குள் இருந்தது. அப்பொழுது சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ஆறு நாட்களில் தம் வார்த்தையால் எல்லாவற்றையும் சிருஷ்டித்து, இந்த பூமியை நிறைவுள்ளதாய் மாற்றினார். உங்களுடைய வாழ்க்கையிலும் காணப்படுகிற குறைவை, வெறுமைகளை மாற்றி, நிறைவைக் கட்டளையிடப்போகிறார். எந்தப் பகுதியிலே நீங்கள் குறைவுபட்டிருக்கிறீர்களோ, அந்தபகுதியிலே நிறைவைக் காணப்போகிறீர்கள். உங்களுடைய மிகப்பெரிய தேவைகளை அவர் சந்திக்க போகிறார். உங்கள் அறிவுக்கு எட்டாத அதிசயமான காரியங்களைச் செய்து, தம்முடைய நாமத்தை உங்கள் மூலமாய் மகிமைப்படுத்தப்போகிறார். இது எப்படியாகும்? யாராலும் நிரப்பமுடியாத குறைவு என் வாழ்க்கையில் காணப்படுகிறது என்று ஒருவேளை நீங்கள் புலம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால் கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது, அவர் எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவர் (எபேசியர் 1:23) மனிதனால் ஒரு பகுதியை மட்டும்தான் நிரப்ப முடியும். ஒரு பகுதியில்தான் உங்களை திருப்தி செய்ய முடியும். ஏதாவது ஒரு காரியத்தை தான் நிறைவேற்ற முடியும். ஆனால் தேவன், எல்லாகுறைவுகளையும் எல்லா விதங்களிலும் நிறைவாக்கமுடியும். அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறவர். அவர் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் கிரியை செய்ய வல்லவராயிருக்கிறார்.

நிறைவுள்ள திரித்துவ தேவன்

திரியேக தேவன் நிறைவுள்ளவர். அவரிடத்தில் ஒரு சிறு விஷயத்தில் கூட குறைவு என்பதே கிடையாது-. ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிற பிதாவாகிய தேவன், இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவர். அவரிடத்தில் யாதொரு மாறுதலும் வேற்றுமையின் நிழலுமில்லை. குமாரனாகிய கிறிஸ்து, பரிபூரணர். அவரிடத்தில் கடுகளவேனும் குறையை கண்டுபிடிக்க இயலாது. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது, பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும் அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. (கொலொசேயர் 1:16) மேலும் பரிசுத்த ஆவியானவர் தன்னில்தான் நிறைவுள்ளவர். ஆவி ஊற்றப்படும் போது, வனாந்திரம் செழிப்பான வயல்வெளியாக மாறும். ஆம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் காணப்படுகிற குறைகளை மாற்றி, நிறையப்பண்ணுகிறவர். இப்படிப்பட்ட திரியேக தேவனை ஆராதித்துக்கொண்டிருக்கிற உங்களுக்கும் எனக்கும் குறைவு என்பதே கிடையாது. நீங்கள் எதிர்பார்த்திராத நன்மைகளை உங்களுக்கு செய்யப்போகிறார். ஒளி வரும்போது எப்படி தானாகவே இருள் விலகி விடுகிறதோ, அதுபோல நிறைவானவர் உங்களுக்குள் வரும்போது, எல்லாக்குறைவுகளும் இருக்கிற இடம் தெரியாமல் ஓடிவிடும். நம்முடைய தேவன் அவாந்திரவெளியை தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார். ஆகவே எதைக்குறித்தும் சோர்ந்துபோகாமல், கர்த்தர் மேல் விசுவாமுள்ளவர் களாயிருங்கள். உங்கள் குறைவுகள் மாறப்போகிறது.

கீழ்ப்படிகிறவர்களின் நிறைவு

இயேசு கிறிஸ்து கெனேசரத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவ வசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார், மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்தப்படவுகளில் ஒன்றில் ஏறினார். அது சீமோனுடையதாயிருந்தது. அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக்கேட்டுக்கொண்டு, அந்தப்படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப்போதகம்பண்ணினார் (லூக்கா 5:1-3)

இரவு முழுவதும் முயற்சி செய்தும் ஒரு மீன் கூட கிடைக்காமல் வந்த சீமோனுடைய படகில் ஏறி, இயேசுகிறிஸ்து மக்களுக்கு போதித்துக்கொண்டிருந்தார். தோல்வியின் உச்சக்கட்டத்தில் இருந்த சீமோனை நோக்கி, கொஞ்சம் ஆழத்திற்கு கொண்டு சென்று வலைகளைப்போடுங்கள் என்றார். ஒரு மீன் கூட கிடைக்காததால் வலைகளில் ஏதேனும் ஓட்டை, பிரச்சனை இருக்குமோ என்று பழுதுபார்த்துக் கொண்டிருந்த சீமோனிடம் மீண்டும் வலையை போடு என்று சொன்னபோது, கொஞ்சம் தயக்கம் காட்டினார். ஆனாலும் உமது வார்த்தையின்படி வலையைப்போடுகிறேன் என்று கீழ்ப்படிந்து, வலையைப்போட்டார்.

அன்பானவர்களே,

தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிதல் என்பது சற்று கடினம்தான். அவருடைய எண்ணங்களை புரிந்துக்கொள்ள முடியாததுதான். என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, என் வழிகள் உங்கள் வழிகள் அல்ல என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகவே, சங்கீதக்காரனாகிய தாவீது, கர்த்தருடைய அறிவு எனக்கு எட்டாத உயரமும், மிகுந்த ஆச்சரியமு மாயிருக்கிறது என்று வர்ணிக்கிறார். வாழ்க்கையில் குறைவையே கண்ட சீமோன், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, வலையை போட்டவுடன், வேதம் சொல்லுகிறது, வலை கிழிந்து போகத்தக்கதான மீன்களைப் பிடித்தார்கள் என்று. இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிவதற்குமுன் ஒரு மீன்கூட இல்லை. ஆனால் எப்பொழுது வார்த்தைக்கு கீழ்படிந்தாரோ அப்பொழுது எல்லா குறைவுகளையும் மாற்றி, அதிகமான நிறைவை கட்டளையிட்டார். அதுமட்டுமல்லாமல், மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். பாருங்கள், என்ன ஒரு ஆச்சரியம்! கீழ்படிதலினால் எவ்வளவு பெரிய நிறைவு, ஆசீர்வாதம்.

அன்பானவர்களே,

நீங்களும் உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறீர்களா? சிறு காரியம் தான். ஆனால் அதற்கு செவி கொடுக்கும்போது, வருகிற ஆசீர்வாதம் கணக்கிலடங்காதது. எல்லாவற்றையும் அறிந்திருக்கிற தேவனாகிய கர்த்தருக்கு காலியான படகை பார்த்தவுடன், அதை நிரப்ப வேண்டும் என்ற ஆசை. ஆகவே, சீமோனை கொஞ்சம் ஆழத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆழத்திற்கு அழைத்துச் சென்ற சீமோனை நிரப்புகிறார். ஆம், ஆழம் என்பது கிறிஸ்துவில் கொண்ட ஆழம். அவரோடு உறவாட உறவாட உங்களை அவர் நிரப்புகிறார். ஒரு படகு அல்ல, இரண்டு படவுகள் அமிழத்தக்கதான மீன்களைப்பிடித்தார்கள். நிறைந்து வழிகிற அளவுக்கு தேவன் உங்களுக்கும் கொடுக்கப்போகிறார். பலியைப்பார்க்கிலும் கீழ்படிதல் உத்தமம் என்று வேதம் கூறுகிறது. சிறு சிறு காரியத்தில் நீங்கள் கீழ்படியும்போது, தேவன் அளவில்லாமல் உங்களை நிரப்புவார். எத்தனையோ வருடங்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கிற சீமோனுக்கு தெரியாதா என்ன? ஆனாலும் உமது வார்த்தையின்படி வலையைப்போடுகிறேன் என்று கீழ்படிந்தவுடன் நிறைவான ஆசீர்வாதம்.

கீழ்படிந்த சீமோனுக்கு மட்டும் ஆசீர்வாதம் அல்ல… கூட இருந்த மற்ற மீனவர்களுக்கும் ஆசீர்வாதம். ஆம், நீங்கள் கீழ்படியும்போது, உங்களுக்கு மாத்திரம் நிறைவு அல்ல. உங்கள் மூலமாய் உங்கள் கம்பெனிக்கும், குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நிறைவு. அது எதனால் ஏற்படும்-? நீங்கள் கர்த்தருக்குக் கீழ்படிதல் மூலமாய் உண்டாகப்போகிறது.

கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு நிறைவு

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது (சங்கீதம் 34:10)

கர்த்தரைத் தேடுகிறவர்களின் வாழ்க்கையில் குறைவு என்பதே கிடையாது. ஆனால் அனுதினமும் கர்த்தரைத் தேடுகிறீர்களா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. காட்டுக்கே ராஜாவான சிங்கத்தின் குட்டிகள் கூட பட்டினியாயிருக்கும். ஆனால் அனுதினமும் கர்த்தரைத் தன் நம்பிக்கையாய்க் கொண்டு, அவரையே சார்ந்திருக்கிறவர்களின் வாழ்க்கையில் எப்பொழுதும் நிறைவுதான். முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் (மத்தேயு6:33) ஆம், நீங்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தருடைய முகத்தை தேடுவீர்களானால், உடுத்துவதற்கு, உண்பதற்கு நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லை.

கானாவூரில் நடைபெற்ற கலியாண விருந்திற்கு இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அப்பொழுது விருந்தில் திராட்சை ரசம் குறைவுபட்டபோது, கலியாண வீட்டுக்காரர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பொழுது இயேசுகிறிஸ்துவை அணுகிய போது, அவர் ஆறு கற்சாடிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னார். அவர்களும் நிரப்பினர். பின்னர் அவற்றை எடுத்து பரிமாறினபோது, முந்தைய திராட்சை இரசத்தை விட இந்த திராட்சை ரசம் மிகவும் ருசியுள்ளதாயிருக்கிறது என்று மெச்சிக்கொண்டனர். ஆம், கலியாண வீடுகளில் உணவுகள் குறைவுபட்டால் கலியாண வீட்டுக்காரர்களுக்கு மிகவும் அவமானத்தைத் தரும். ஆனால், அவர்கள் இயேசுகிறிஸ்துவை நாடினபோது, அந்தக்குறைவை நிறைவாய் மாற்றி, அந்த வீட்டாருக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தினார்.

உலகின் முதல் குடும்பத்தை பிசாசானவன் வஞ்சித்து ஏமாற்றி அவர்களின் நிறைவுகளையெல்லாம் பறித்துக்கொண்டான். ஆனால் புதிய குடும்பமாகப்போகிற இந்த திருமண நாளில் எந்த ஒரு குறைவும் வரக்கூடாது என்பதற்காக தேவன் தமது முதலாவது அற்புதத்தை செய்தார். பிரியமானவர்களே, என் வாழ்க்கை மாரா போல் கசப்பாயிருக்கிறது. என் குடும்பத்தில் நிறைவு காணப்படவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிற உங்களுக்கு நிறைவான ஆவியானவர் எல்லா குறைவுகளையும் மாற்றுவார். மண்ணான கற்சாடியில் தண்ணீரை ஊற்றியதும் அது திராட்சை ரசமாக மாறினது போல, மண்ணான மனிதனாகிய உங்கள்மேல் ஜீவத்தண்ணீராகிய பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும்போது, உங்கள் குறைவுகளெல்லாம் நிறைவாக மாற்றப்படும்.
ஆகவே நீங்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுவது மிக அவசியம். இயேசுகிறிஸ்து மரித்து, உயிர்த்து பரமேறுவதற்கு முன்பு தம்முடைய சீஷர்களை நோக்கி, உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார் என்றார். இந்த தேற்றரவாளன் எப்பொழுதும் உங்களோடிருக்கிறார். ஆகவே, நீங்கள் அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு நிறைவுதான்.

விடாய்த்த ஆத்துமாவிற்கு நிறைவு

நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன். (எரேமியா 31:25)
நம்முடைய தேவன். ஆத்துமாவின்மேல் கரிசனையுள்ளவராயிருக்கிறார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். ஆம், வருத்தத்தோடு வியாகுலத்தோடு இருப்பவர்களின் ஆத்துமாக்களை ஆனந்தத்தால் நிரப்புகிறார். சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாக துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார் என்று இயேசுகிறிஸ்துவைக்குறித்து ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக உரைக்கிறார். ஆம், துயரத்திற்கு பதிலாக ஆனந்த தைலத்தால் நிறையப்பண்ணுகிறார். அவர் நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார் (சங்கீதம் 34:18) மேலும் இருதயம் நொறுங்குண்டவர்களை குணமாக்கி, அவர்களுடைய காயங்களை கட்டுகிறார் (சங்கீதம் 147:3). நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்; உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன் (ஏசாயா 57:15) என்று தேவனாகிய கர்த்தர் விடாய்த்த ஆத்துமாவை தேற்றுகிறார்.
குடும்பத்தில் அன்பு கிடைக்கவில்லை, எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள், கடந்த காலத்தில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறார்கள், பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாயிருக்குமோ என்று புலம்புகிறீர்களா? வியாபாரத்தில் வருமானமே இல்லை, கடன்சுமை மிகவும் அதிகமாயிற்று, என்ன செய்வதென்றே தெரியவில்லை, பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட முடியவில்லையே என தவித்துக்கொண்டிருக்கிறீர்களா? வியாதியால் மிகவும் நொந்துபோயிருக்கிறேன், இதனிமித்தம் மனதில் சமாதானமே இல்லை என அங்கலாய்த்துக்கொண்டிருக்கிறீர்களா? அன்பு சகோதர சகோதரிகளே, நீங்கள் கவலைப்படத் தேவையேயில்லை. காரணம் நிறைவானவர் உங்களுக்குள் இருக்கிறார். எல்லா குறைவுகளும் உங்களை விட்டு ஓடிவிடும். தம்முடைய வல்லமையுள்ள வார்த்தையால் உங்களை மகிழ்ச்சியாக்குவார்.

ரூஹா செய்தி மடல் – Ruah News Letter – Mar., 2019

அன்பானவர்களே!

மனதுருக்கம் நிறைந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன். நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம் (1கொரி 13:10), தம் ஒரே பேரான குமாரனை நமக்காக தந்து, தேவன் அவருடைய அளவற்ற அன்பை நம்மீது பொழிந்தருளியிருக்கிறார். நிறைவான கிறிஸ்து நம் வாழ்வில் வரும்போது, குறைவுகளெல்லாம் மாறிவிடும். வறட்சிகள் செழிப்பாய் மாறிவிடும். உங்கள் தோல்விகள் எல்லாம் ஜெயமாகிவிடும்.

மகிமையான Freedom நாக்பூர்

நம் ஊழியத்தின் உன்னத தரிசனமான Freedom, கடந்த மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் 25 வது திக்ஷீமீமீபீஷீனீ வெள்ளிவிழாவை நாக்பூரில் நடத்த கர்த்தர் கிருபையளித்தார். இதுவரையில்லாத அளவிற்கு ஆத்துமாக்கள் சுமார் 20,000ற்கும் மேற்ப்பட்டோர், மைதானமே நிரம்பி வழியும்படி திரள்கூட்டமாய் வந்தனர். கர்த்தர் மகத்துவமான காரியங்களைச் செய்தார், வல்லமையான துதி ஆராதனையோடு, விசேஷமான தீர்க்கதரிசன தேவ செய்தி வந்திருந்த ஆத்துமாக்களை அதிகமாய் தேவனண்டையில் ஈர்த்தது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையிலும், எழும்பமுடியாமல் அவர்களை தடைச்செய்து கொண்டிருக்கிற சகல சங்கிலிகளும் அறுக்கப்பட்டு ஜனங்கள் விடுதலைப் பெற்றுக் கொண்டனர். தேவன் தந்த அபிஷேகத்தை எப்படி காத்துக்கொள்ளவேண்டும், பூமிக்குரிய வாழ்க்கைக்குப் பின் பரலோகமா? நரகமா? எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற தேவ செய்திகளோடு கர்த்தர் தம் ஜனங்களைக்குறித்த தம் பாரத்தை வெளிப்படுத்தினார். பல ஆண்டுகள் பிசாசின் பிடியிலும், பாவத்தின் அடிமைத்தனத்திலும் சிக்கியிருக்கிற அநேகரை கர்த்தர் விடுவித்தார். பலவித வியாதியினாலும் பெலவீனப்பட்டிருந்த அநேகருக்கு கர்த்தர் விடுதலையைக் கொடுத்தார். கேன்சர் வியாதியினால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாய் பேசமுடியாமல், வாயில் டியூபோடு கூட்டத்திற்கு வந்த அன்பு சகோதரியை கர்த்தர் சுகப்படுத்தி, பேசும்படி அற்புதம் செய்தார். தேவனுக்கென்று உங்கள் வாழ்க்கையை எத்தனைபேர் ஒப்புக்கொடுப்பீர்கள் என்று அறைகூவல் விடுத்த போது, கணக்கற்ற வாலிபர்கள் தங்களை தேவனுக்கென்று ஒப்புக்கொடுத்தனர். இத்தனை திரளான ஆத்துமாக்கள் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக எற்றுக்கொண்டதை பார்க்கும் போது, மிகுந்த சந்தோஷத்தினால் என் கண்கள் கலங்கினது, நாக்பூர் மாநிலத்தில் தேவன் தந்த மாபெரும் எழுப்புதலுக்காக கோடி நன்றிகளைச் செலுத்துகிறேன். இந்த ஆத்தும அறுவடைக்கு தோள் கொடுத்த நாக்பூரின் தேவ ஊழியர்களுக்கும், போதகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எக்காளப்பண்டிகை

தேவனுடைய பெரிதான கிருபையினால் எக்காளப்பண்டிகை தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள 33 மாவட்டங்களிலும், இந்தியாவின் அநேக மாநிலங்களிலும் நடைபெற்றுவருகிறது. கர்த்தர் மகிமையாய் ஒவ்வொரு கூட்டத்தையும் நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் துதித்து, ஜெபித்து, எக்காளங்களை ஊதி, அப்பட்டணங்கள் கிறிஸ்துவுக்கு சொந்தமென்றும், இனி பாவங்கள் இப்பட்டணத்தை மேற்க்கொள்ளமுடியாதென்றும், சபைகள் எழும்பும்படியாகவும், ஒருவரும் நரகத்திற்கு போகவேகூடாதென்றும், விசுவாச அறிக்கையிட்டு தீர்க்கதரிசன வார்த்தைகளைப் பிரகடனப்படுத்தி,, வருகிற பாராளுமன்ற தேர்தலில் தேவனுக்கு சித்தமானவர்கள் ஆளுமைக்கு வரும்படியாகவும் ஜெபித்துவருகிறோம். கூட்டங்கள் நடத்தப்படும் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள தேவ ஊழியர்கள், போதகர்கள் இணைந்து தோள் கொடுத்து, செல்கின்ற இடங்களிளெல்லாம் எங்களை பாசத்தோடு உபசரித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவது என் உள்ளத்தை மிகவும் பூரிப்படையச் செய்கிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிசெலுத்துகிறேன். நாங்களெல்லாரும் கிறிஸ்துவுக்குள் சகோதரர்களாய் இருக்கிறோம் என்று எண்ணி கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன். கர்த்தர் ஊழியர்களுக்குள் ஒருமனப்பாட்டின் ஆவியை கொடுத்துவருகிறார். எந்த ஒரு சபை பாகுபாடின்றி, கர்த்தர் தந்த இத்தரிசனத்தை நிறைவேற்ற தங்கள் முழு ஒத்துழைப்பை கொடுத்து வருகின்றதை காணும்போது, இந்தியாவின் எழுப்புதல் மிக சமீபமாயிருக்கிறது என்று முழு நிச்சயமாய் சொல்லமுடியும். மட்டுமல்லாது அநேக தேவபிள்ளைகள் தொலைபேசியில் எங்கள் ஊழியங்களை தொடர்பு கொண்டு, எங்கள் பட்டணத்தில் எப்பொழுது எக்காளப்பண்டிகை நடத்துவீர்கள் என்று ஆர்வத்தோடு விசாரிப்பது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது. இம்மாதம் தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் எக்காளப்பண்டிகை நடத்தப்படவுள்ளது. நானும் எமது குழுவினரும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாவட்டத்திற்குச் சென்று ஓய்வின்றி இக்கூட்டங்களை நடத்திக்கொண்டுவருகிறோம். எங்களுக்காகவும், எங்கள் பாதுகாப்பிற்காகவும், தேவனுடைய ஆளுகை, அவருடைய சமுகம் தொடர்ந்து நடத்தும்படியாக ஜெபித்துக்கொள்ளுங்கள்.

ரூஹா 13வது ஆண்டு விழா

அன்பானவர்களே! இதுவரை நம் ஊழியத்தோடு தோள்கொடுத்து, பாரம் நிறைந்த ஜெபத்தினாலும், தேவனுடைய ராஜ்ஜியத்திற்கென்று மனஊற்சாகத்தோடு விதைத்த காணிக்கைகளுக்காகவும், விலையேறப்பெற்ற உங்கள் ஒத்துழைப்பிற்காகவும், உங்கள் குடும்பத்தில் ஒரு நபராய் என்னை நேசிக்கின்ற அன்பிற்காகவும், தேவனைத் துதிப்பதோடு, என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ரூஹா ஊழியங்களின் 13வது ஆண்டு விழாவை கர்த்தர் மிக ஆசீர்வாதமாய் நடத்தித் தந்தார். பரிசுத்த ஆவியானவரின் அளவில்லா மகிமை நிறைந்த ஆராதனையோடு, கர்த்தரால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்டுவரும் ஊழியர் போதகர் சாம் அச்சன் (புனலூர்) விசேஷமான தீர்க்கதரிசன தேவச் செய்தியை அளித்தார்கள்.

இதே கொண்டாட்டத்தின் நாளிலே மற்றுமொரு மகிமையான காரியத்தை செய்ய கர்த்தர் கிருபையளித்தார். 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நமது ரூஹா வேதாகம கல்லூரியின் மூலமாய் கர்த்தருடைய தயவினால் அநேக ஊழியர்களை எழுப்பிவருகிறோம், தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக. நம்முடைய வேதாகம கல்லு£ரியில் இவ்வாண்டு பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு பட்டமளிக்கும் விழாவை நடத்தவும் கர்த்தர் கிருபைச்செய்தார். மாரநாதா சபையின் தலைமைப் போதகரான Rev. Finny Joseph அவர்கள் சிறப்பு தேவச்செய்தி அளித்து, மாணவர்களை ஆசீர்வதித்தார்கள், மூத்த ஊழியர்கள் பங்கேற்று ஜெபித்து, நமது ஊழியத்தை ஆசீர்வதித்தது எங்கள் உள்ளத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. தொடர்ந்து ரூஹா ஊழியங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். இப்பதிமூன்று ஆண்டுகள் எங்களோடு இணைந்திருக்கிற உங்களுக்கு அன்பு நிறைந்த உள்ளதோடு நன்றி சொல்கிறேன். அனுதினமும் உங்கள் ஒவ்வொருவருக்காவும் நான் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். கர்த்தர் நிறைவாய் உங்களை ஆசீர்வதிப்பாராக.

உங்கள் அன்பு சகோதரன்

போதகர் ஆல்வின் தாமஸ்

வாக்குத்தத்தச் செய்தி – எக்காள சத்தம் – போதகர் ஆல்வின் தாமஸ் – Feb., 2019

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இந்த மாதம் கர்த்தருடைய சத்தமாகிய எக்காள சத்தம் பற்றிய வெளிப்பாடுகளையும் மகத்துவங்களையும் உங்களுக்கு எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன். எக்காளத்தைக் குறித்ததான மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட சத்தியங்களை விளங்கிக்கொள்ள ஜெபத்துடன் வாசியுங்கள். கர்த்தருடைய ஆவியானவர் உங்களோடு இடைப்படுவாராக!

எக்காளம்

குடு, ராம் (Kudu, Ram) என்கிற ஆடுகளின் கொம்பிலிருந்து எக்காளங்கள் தயாரிக்கப்படுகின்றது. இதை எபிரேய மொழியில் ஷொஃபார் (SHOFAR) என்று அழைப்பார்கள். எக்காள சத்தமானது முதன் முதலில் கர்த்தருடைய தாசனாகிய மோசே, சீனாய் மலையில் கர்த்தரோடு பேசிக்கொண்டிருந்தபோது உண்டாயிற்று. (யாத்திராகமம் 19:19) எக்காளத்தை எப்போது ஊத வேண்டும்? எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரவேலர்கள் கொண்டாடுகிற பண்டிகைகளில் எக்காள பண்டிகையும் உண்டு. அது எக்காள சத்தத்தின் ஞாபகக்குறியாக கொண்டாடுகிற பண்டிகையாக இருக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டிருக்கிறார். மாதப்பிறப்பிலும், நியமித்தக் காலத்திலும், பண்டிகைகளிலும் எக்காள சத்தம் தொனிக்கப்பட வேண்டும் (சங்கீதம் 81:3). நாம் சில நேரங்களில் சில காரியங்களுக்காக உபவாசம் இருக்கிறோம். ஆனால் உபவாசம் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, எப்படி செயல்படுகிறது என்பதும் தெரிவதில்லை. ஆனால் உபவாசம் வேலை செய்கிறது. அது போலவே, ஆவிக்குரிய உலகத்தை இயக்கும் வல்லமையுள்ள ஆயுதமாக எக்காள சத்தம் செயல்படுகிறது.

நீங்கள் ஒரு எக்காளம்

எக்காளமானது பழைய ஏற்பாட்டில் ஆசாரியர்கள் கையில் இருந்தது. எரிகோ பட்டணத்தை சுற்றி வரும்பொழுது, ஆசாரியர்கள் எக்காளத்தை ஊதினார்கள்; ஜனங்கள் ஆர்ப்பரித்தவுடன் அலங்கம் இடிந்து விழுந்தது. (யோசுவா 6:20) இஸ்ரவேலர்களை நியாயம் விசாரித்த ஏகூத், கிதியோன் போன்ற நியாயாதிபதிகள் எக்காளம் ஊதியபோது, மீதியானர்கள், எதிரிகள் முறியடிக்கப்பட்டார்கள். கர்த்தருடைய ஆலயத்தில் துதிக்கிறவர்கள் எக்காள இசையோடு கர்த்தரைத் துதித்தபோது, தேவனுடைய மகிமை ஆலயத்தை அளவில்லாமல் நிரப்பிற்று. மேலும் பட்டணத்தை காக்கிற காவற்காரர்கள் எக்காளத்தை வைத்திருந்திருந்தார்கள். ஆபத்து வரும்போது, எக்காளத்தை ஊதுவார்கள்; பட்டணமே காக்கப்படும் (எசேக்கியேல் 33:3) அதற்கும் மேலாக பரலோகத்திலிருக்கிற தூதர்கள் எக்காளங்களை ஊதினபோது, பல மாற்றங்கள் நிகழ்ந்தன (வெளி.8:7&13) என வெளிப்படுத்தின விசேஷத்தில் வாசிக்கின்றோம். மேலும் இந்த கொம்பில், அபிஷேகம் பண்ணும் தைலம் நிரப்பப்பட்டிருக்கும். இஸ்ரவேலர்கள் ஆட்டின் கொம்பிலே தைலத்தை நிரப்பி, இரண்டு பக்கமும் மெழுகினால் அடைத்திருப்பார்கள். ஞானதிருஷ்டிகாரராகிய சாமுவேல், தைலக்கொம்பை எடுத்துக்கொண்டு வந்து தாவீதை அபிஷேகம் பண்ணினார்.

ஆட்டின் கொம்பிலிருந்து எடுக்கப்படும் எக்காளமானது, ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்துவுக்கு அடையாளமாயிருக்கிறது. கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்கரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும் என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். (சங்கீதம் 18:2) தாவீது இரட்சணியக்கொம்பு என கர்த்தரை வருணிப்பது கிறிஸ்துவைதான். அவர்தான் இரட்சகர். தேவாலயத்தில் தரித்திருந்த சிமியோன், பிள்ளையாகிய இயேசுவை கண்டு, உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றும். (லூக்கா 2:32), சகரியா தீர்க்கதரிசி, தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்தில் நமக்கு இரட்சணியக் கொம்பை ஏற்படுத்தினார் என்று சந்தோஷத்தினால் நிரம்பி சொல்லுகிறார்.

இப்படிப்பட்ட மகத்துவமான கிரியைகளைச் செய்கிற எக்காள சத்தத்தை தொனிக்கிற எக்காளமாய் கர்த்தர் உங்களை அழைத்திருக்கிறார். எக்காள சத்தம் சாதாரணமானவைகளை அசாதாரணமாக மாற்றும்.

அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்-? (1 கொரிந்தியர் 14:6) பட்டணத்தைக் காக்கிற காவற்காரன், எதிரி வரும்போது எக்காளம் ஊதுவான். அப்பொழுது ஜனங்கள் எச்சரிப்படைவார்கள். காவற்காரன் ஊதுகிற எக்காளத்தின் சத்தம் ஜனங்களுக்கு விளங்கவில்லையென்றால் அவர்கள் எப்படி எச்சரிப்படைந்து விழித்துக்கொள்ளுவார்கள்? தேசத்திற்கு வரப்போகிற அழிவை விளங்கப்பண்ணுகிற தெளிவான சத்தத்தை உடைய எக்காளமாய் நீங்கள் இருக்க வேண்டியது அவசியம். எக்காள சத்தத்தை தொனிக்கச் செய்வது சாதாரண காரியமல்ல. எதிரிகள் இரவு நேரத்தில், மனுஷர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் பட்டணத்திற்கு விரோதமாக வந்து, முற்றுகையிட்டு கொள்ளையடிப்பார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் காவற்காரனாய், பட்டணம் பாதுகாக்கும்படி விழித்திருந்து திறப்பில் நிற்க வேண்டும்.

எக்காள சத்தம் & எச்சரிப்பின் சத்தம்

காவற்காரன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனங்களை எச்சரிக்கும்போது…(ஏசாயா 33:3)
காவற்காரர்கள் பட்டணத்தின் வாசல்களிலும், மலைகளிலும் காவற்காரர்கள் நின்றுக் கொண்டு, சத்துருக்கள் யாராவது உள்ளே நுழைகிறார்களா? என இரவும் பகலும் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை எதிரிகள் யாராவது உள்ளே நுழைவது போல தெரிந்தால், எக்காளத்தை சத்தமாக ஊதி, எச்சரிப்பின் சத்தத்தை தொனிக்கச் செய்வார்கள். அப்பொழுது ஜனங்கள் எச்சரிப்படைந்து, சத்துருவுக்கு விரோதமாக போரிட தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுவார்கள்.

யோவேல் தீர்க்கதரிசி, எக்காளங்களை ஊதுங்கள்; எச்சரிப்பின் சத்தமிடுங்கள், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது (யோவேல் 2:1) என அறைகூவல் விடுக்கிறார். இயேசுகிறிஸ்துவின் முதல் வருகையிலே, வழியை ஆயத்தப்படுத்துவதற்காக யோவான்ஸ்நானகன் என்கிற தீர்க்கதரிசியை கர்த்தர் முன்னமே அனுப்பி, மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது, தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் (மத்தேயு 3:12) என்ற எச்சரிப்பின் சத்தத்தை தொனிக்கச் செய்தது போல, இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு ஒரு கூட்ட ஜனங்களை ஆயத்தப்படுத்தும்படியாக, எச்சரிப்பின் சத்தத்தை முழங்கும்படியாக, கர்த்தர் ஒரு தீர்க்கதரிசன சந்ததியை எழுப்புகிறார். அந்த தீர்க்கதரிசன சந்ததி நீங்களும் நானும்தான். நம்முடைய வேலை எக்காள சத்தத்தைப்போல வரப்போகும் அழிவிலிருந்து ஜனங்களை விடுவிக்க எச்சரிக்க வேண்டும்.

காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான். ஆனாலும் இரத்தபழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன் (எசேக்கியேல் 33:6)

மேலும், காவற்காரன் தேசத்திற்கு வரப்போகும் தீங்கைக் கண்டும், ஜனங்களை எச்சரிக்கப்படாமல் இருந்தால், கர்த்தர் அவனை நியாயம் விசாரிப்பார் என்று வேதாகமம் கடுமையாக எச்சரிக்கிறது. “மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே, நானும் அவருடன் பறந்து செல்வேன்” என்ற கீர்த்தனைப் பாடல்களை பாடிக்கொண்டிருந்தால் மாத்திரம்போதாது. உங்களுக்கு தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள் மட்டுமல்லாது எல்லாருக்கும் சுவிசேஷத்தை அறிவித்தீர்களா? நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்கு காவலாளனாயிரு (எசேக்கியேல் 38:7) என்று எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் உரைக்கிறார். ஒரு மிகப்பெரிய பொறுப்பை கர்த்தர் உங்கள் கைகளில் இன்று கொடுக்கிறார். கர்த்தருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, எச்சரிப்பின் சத்தமாகிய எக்காள சத்தத்தை ஊதும் காவற்காரனாய், ஜனங்களை எச்சரிக்கும்படியாக அழைத்திருக்கிறார். ஆகவே நீங்கள் உங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுங்கள்.

எக்காள சத்தம் & கர்த்தருடைய சத்தம்

கர்த்தருடைய நாளில் அவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது: நான் அல்பாவும் ஒமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்… என்று விளம்பினது (வெளி1:10,11)
இயேசுவுக்கு மிகவும் பிரியமான அப்போஸ்தலனாகிய யோவான், பத்மு தீவிலே தனிமைப்படுத்தப்பட்டபோது, கண்ட தரிசனங்களை வெளிப்படுத்தின புஸ்தகத்தில் எழுதியிருக்கிறார். அவர் ஆவிக்குள்ளானபோது, பரலோகத்தில் எக்காள சத்தம் போன்ற சத்தத்தைக் கேட்டார். அந்த சத்தம் நான் அல்பாவும் ஒமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன் என்று விளம்பினதைக் கேட்டார். ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகத்தில், நான் முந்தினவரும் பிந்தினவருமாமே (ஏசாயா 48:12) என்று கூறினவரின் சத்தத்தைக் கேட்டார். ஆம், ஆரம்பமும், முடிவுமாயிருக்கிற முடிவில்லாத கர்த்தருடைய சத்தம் அந்த எக்காள சத்தம்.

எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார். (யாத்திராகமம் 19:19) வேதத்தில் முதன்முதலாக எக்காள சத்தம் தொனிக்கப்பட்டதை இங்கே பார்க்கிறோம். சீனாய் மலையில், மோசேயோடு தேவன் பேசிக்கொண்டிருந்தபோது, எக்காள சத்தம் தொனித்தது. தேவன் எக்காள சத்தத்தில் மோசேயோடு பேசிக்கொண்டிருந்தார். மேலும் எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டபோது, மோசே நீர் எங்களோடு பேசும், தேவன் எங்களோடு பேசாதிருப்பாராக! என்று நடுங்கி நிற்கிறதை பார்க்கமுடிகிறது.

எக்காள சத்தம் கர்த்தருடைய சத்தம். ஆகவேதான் எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே ஒரு இமைப்பொழுதிலே நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம் (1 கொரிந்தியர் 15:51,52) கர்த்தர் ஆரவாரத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார். (1 தெசலோனிக்கேயர் 4:16,17)

எக்காள சத்தம் தொனிக்கப்படும்போது, பிரேதக்குழிக்குள் வெறும் எலும்பாய் இருக்கிறவர்களின் சதை அழிந்திருந்தாலும், அந்த எலும்பு கேட்கிற அளவுக்கு எக்காள சத்தம் இருக்கும். அவர்கள் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். ஆண்டவர் உங்களையும் அப்படிப்பட்ட எக்காள சத்தமாய் மாற்றப்போகிறார். நீங்கள் கர்த்தருடைய கையில் எக்காளமாய் மாறும்போது, உங்களைக் கொண்டு மரித்தவர்களை உயிரோடே எழுப்புவார். ஆகவே தேவ பிள்ளைகளாகிய நீங்கள், கர்த்தருடைய சத்தமாகிய எக்காள சத்தத்தைக் கேட்கிறவர்களாய் இருக்க வேண்டும்.

எக்காள சத்தம் & துதியின் சத்தம்

அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காளச்சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும். (யோசுவா 6:5)
இஸ்ரவேலர்கள் எக்காள சத்தத்தை தொனிக்கச் செய்தபோது, எரிகோவின் மதில்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இன்று கர்த்தர் துதி என்கிற எக்காளத்தை உங்கள் வாயிலே வைத்திருக்கிறார். நீங்கள் கர்த்தருடைய நாமத்தை துதியினால் உயர்த்த உயர்த்த, தேவன் அதில் பிரியப்பட்டு உங்களுக்கு விரோதமாக வருகிற எரிகோ போன்ற தடைகளை உடைத்தெறிவார். யோசபாத்துக்கு விரோதமாக வந்த ஐந்து தேசத்தின் ராஜாக்களை யுத்தமில்லாமல், துதியினால் மேற்கொண்டார்கள். ஆம், யுத்தத்தில் போர்வீரர்களுக்கு முன்பாக பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத்துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். அப்பொழுது அவர்கள் பாடி துதி செய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத் தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். (2 நாளாகமம் 20:22) எவ்வளவு பெரிய ஆச்சரியம். இஸ்ரவேலின் துதிகளில் வாசமாயிருக்கிற கர்த்தரால் செய்யக்கூடாத அதிசயமான காரியங்கள் ஒன்றுமில்லை.

நாள்தோறும் என் வாய் உமது துதியினால் நிறைந்திருப்பதாக (சங்கீதம் 71:8) கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள் (சங்கீதம் 98:6), எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள் (சங்கீதம் 150:3) என்று தாவீது சொல்கிறார். ஆம், சத்துருவின் அரண்களை நிர்மூலமாக்க துதி என்கிற எக்காள சத்தத்தை தொனிக்கச் செய்யுங்கள். அதிகாலையில் எழுந்து கர்த்தரை உயர்த்தும் பாடல்களை பாடி, கர்த்தருடைய வல்லமையுள்ள நாமத்தை மகிமைப்படுத்துங்கள். துதியினால் சத்துருவை ஓட ஓட துரத்துங்கள்.

எக்காள சத்தம் & ஜெபத்தின் சத்தம்

உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது, பூரிக்கைகளை பெருந்தொனியாய் முழங்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் நினைவுகூறப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவீர்கள் (எண்ணாகமம் 10:9)

உங்களுக்கும், தேசத்திற்கும் விரோதமாக எழும்புகிற சத்துருவை துதியினாலும் ஜெபத்தினாலும் வீழ்த்த வேண்டும். ஜெபம் என்கிற எக்காளத்தை ஊதும்போது, தேவனுடைய சமூகத்தில் நினைவுகூறப்படுகிறோம். “ஜெபத்தைக் கேட்கிறவர்” என்ற நாமத்தை உடையவர், தம்முடைய பிள்ளைகள் கூப்பிடும்போது, நிச்சயமாக பதில் செய்வார். அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே மறு உத்தரவு கொடுப்பேன், அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன் என்று வாக்குரைத்தவர் காரியங்களுக்கு பதில் செய்கிற தேவனாயிருக்கிறார்.
ஆனால் தேசத்திற்காக மன்றாட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தீர்க்கதரிசன புஸ்தகங்களில் வாசித்து பார்க்கும்போது தேவன் தம்முடைய ஜனத்தை அழிவிலிருந்து பாதுகாக்கவும், திறப்பில் நின்று மன்றாட்டு ஜெபத்தை ஏறெடுக்கவும் மனிதர்களைத் தேடுகிறார். ஆம் பரிந்துப் பேசி ஜெபிக்க ஆட்களைத் தேடுகிறார். ஆகவே தேசத்தின் அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சுவிட்டழுகிறவர்களின் நெற்றியில் அடையாளம் போடு (எசேக்கியேல் 9:4) என்று மன்றாட்டு ஜெப வீரர்களை தனித்து அடையாளப்படுத்துகிறார். மேலும் தேசத்திற்காக அழுது புலம்பி, ஓலமிட்டு அலறு, இடுப்பு நொறுங்க பெருமூச்சுவிடு, மனங்கசந்து அழு (எசேக்கியேல் 21:6) என தேசத்திற்காக மன்றாடுகிற கூட்டத்தை நோக்கி தேவன் எத்தனிக்கிறார்.

தேசத்திற்கு தேவன் என்ன செய்ய நோக்கம் கொண்டிருக்கிறார் என்று அவருடைய இதயத்துடிப்பை அறிந்து அதற்காக ஜெபிக்கும் வீரர்களாக நீங்கள் மாற வேண்டும். தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை தரித்துக்கொண்டவர்களாய், ஆவியின்பட்டயத்தை பிடித்துக்கொண்டு சத்துருவுக்கு எதிராக போராடும் யுத்த வீரர்கள் நீங்கள். பிசாசின் பிடியில் சிக்கியிருக்கும் ஆத்துமாக்களை மீட்டு, தேவனுக்கு நேராக நடத்தும் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகள் நீங்கள். இரவு பகலாக தேசத்தின் எழுப்புதலுக்காக மன்றாடும் ஜாமக்காரர்கள் நீங்கள். ஆகவே துதியோடு ஜெபம் என்கிற எக்காளத்தை சத்தமாய் ஊதுங்கள். தேசத்தை பிடித்திருக்கிற பாவத்தின் தலைகள் தெறிக்கப்படட்டும்.

எக்காள சத்தம் & வெற்றியை பிரகடனப்படுத்துகிற சத்தம்

மூன்று படைவீரர்களின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து; தீவெட்டிகளைத் தங்கள் இடது கைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலது கைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு, பாளையத்தைச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையில் நின்றார்கள். அப்பொழுது பாளையத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள் (நியாயாதிபதிகள் 7:20,21)

கிதியோன் எனும் நியாயாதிபதி இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நாட்களில் மீதியானியர்கள் அவர்களை மிகவும் ஒடுக்கினார்கள். அவர்கள் விளைச்சலை கெடுத்துப்போட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முந்நூறு படைவீரர்கள் பானைகளையும் தீவெட்டிகளையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டு மீதியானியருக்கு எதிராக யுத்தம் செய்ய போனார்கள். கிதியோனும் 300 படைவீரர்களும் பானைகளை உடைத்து, எக்காளங்களை ஊதினபோது, வெட்டுக்கிளிகளைப்போல திரளாய் பள்ளத்தாக்கிலே படுத்திருந்த மீதியானியர்களும் அமலேக்கியர்களும் சிதறிக்கூக்குரலிட்டு ஓடிப்போனார்கள். பின்பு மீண்டும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனின் பட்டயம் என வெற்றியைப்பிரகனடப்படுத்தினார்கள்.

ஏழாம் தூதன் எக்காளம் ஊதி பிரகடனப்படுத்தும்போது, உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின (வெளி 11:15) கிதியோனும் அவனுயை சேனைகளும் எக்காளங்களை ஊதி, வெற்றியை பிரகடனப் படுத்தினது போல, நீங்களும் துதி மற்றும் ஜெபம் என்ற எக்காள சத்தத்தை தொனிக்கச் செய்து, வெற்றியைப் பறை சாற்றுங்கள். உங்களுக்கு எதிராக வருகிற தடைகளை வார்த்தையினால் தகர்த்தெறிந்து வெற்றியைப் பிரகடனப் படுத்துங்கள்.

ரூஹா செய்தி மடல் – Ruah News Letter – Feb., 2019


கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு,உயிர்ப்பிக்கிற ஜீவனுள்ள தேவனுடைய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். காலங்கள் மாறினாலும், உறவுகள் மாறினாலும் நேற்றும், இன்றும் என்றுமே மாறாத நேசராகிய இயேசுகிறிஸ்து, சதாகாலங்களிலும் உங்களோடே இருப்பார். இவ்வாண்டின் தீர்க்கதரிசன வார்த்தையாக, “என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன், நீங்கள் உயிரடைவீர்கள்…” – எசேக்கியேல் 37:14 என்ற வார்த்தையின்படியும், இம்மாத வாக்குத்தமான “நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும்” 1 கொரிந்தியர் 13:10 என்ற வாக்குத்தத்தின்படியேயும் உங்கள் வாழ்வில், குடும்பத்தில், வியாபாரத்தில், மரித்த யாவும் உயிரோடு எழும்பப் போகிறது மட்டுமல்லாமல் நிறைவான. ஆசீர்வாதத்தினால் நிறைந்திருப்பீர்கள் என்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஆசீர்வதிக்கிறேன்.

எக்காளப் பண்டிகை

இதோ! சீக்கிரமாய் வருகிறேன் என்று சொன்ன நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வருகை மிக சமீபமாயிருக்கிற இந்நாட்களில், கர்த்தருடைய வருகைக்கு முன் இந்திய தேசமெங்கும் எழுப்புதல் பற்றியெறியவும், கடைசி எக்காளச் சத்தத்திற்கு முன்பாக வரப்போகிற இயேசு ராஜாவை சந்திக்க ஆயத்தப்படுத்தும் எச்சரிப்பின் சத்தத்தை தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களிலும், இந்தியாவின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் தொனிக்கச்செய்து, துதித்து, ஜெபித்து இயேசுகிறிஸ்துவின் நாமத்தையும், கர்த்தர் தரும் தீர்க்க தரிசன வார்த்தைகளையும் பிரகடனப்படுத்தவுமே இந்த எக்காளப்பண்டிகை. மேலும், பட்டணங்கள் பாதுக்காக்கப்படவும், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஜாமக்காரர்களை எழுப்பவும், ஒரு சேனையாய் 100 நாட்கள் (கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை) எக்காளப்பண்டிகையை ஆசரிக்க கடந்து சென்றுள்ளோம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சபை பாகுபாடின்றி அனைத்து திருச்சபை தலைவர்களும், போதகர்களும் இணைந்து இக்கூட்டங்களை நடத்த கர்த்தர் பெருந்தயை பாராட்டியுள்ளார்.

Ekkala Pandigai

கடந்த ஜனவரி 20ம் தேதி பாண்டிச்சேரியில் எக்காளப் பண்டிகைக் கூட்டத்தை மகிமையாய் ஆரம்பிக்க கிருபை செய்தார். ஜனவரி 21ம் தேதி கடலூரிலும், 22ம் தேதி உளூந்தூர் பேட்டையிலும், 23ம் தேதி மன்னார்குடியிலும், 24ம் தேதி தரங்கம்பாடியிலும், 25ம் தேதி கும்பகோணத்திலும், 26ம் தேதி புதுக்கோட்டையிலும், 27ம் தேதி நாகப்பட்டிணத்திலும் நடத்தியுள்ளோம்.

சென்ற இடத்திலெல்லாம் மக்கள் தேசத்திற்காக திரளாய் எழும்பி ஜெபித்தார்கள். மிகுந்த ஆசீர்வாதம் பெற்றார்கள். அந்தந்த பகுதியின் போதகர்களும், அனைத்து திருச்சபை தலைவர்களும் மிகுந்த ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். அவர்களை நன்றியோடு நினைக்கிறோம். ஏப்ரல் 29ம் தேதி வரை தமிழகத்தின் மற்ற இடங்களுக்கும், இந்தியாவின் மாநில தலைநகரங்களுக்கும், சென்று ஏக்காளப் பண்டிகை கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

நீங்களும் எங்களோடு இணைந்து இத்தரிசனத்தின் மூலமாக தேவசித்தத்தை நிறைவேற்றிட இந்த 100 நாட்கள் எக்காளப் பண்டிகைக்காய் ஜெபித்துக் கொள்ளுங்கள். உங்களால், எங்களோடு பயணிக்க இயலாவிட்டாலும், விலையேறப் பெற்ற கிறிஸ்துவின் வார்த்தைகளை நெடுந்தொனியாய் தேசத்தில் முழங்கிட எங்களை அனுப்புங்கள். இவ்வெழுப்புதல் அறுவடைக்காய் உங்கள் மனபூர்வமான காணிக்கைகளினால் தாங்குங்கள். திரளான அறுவடையில் பங்குபெறுங்கள்.

ரூஹா துதி ஜெப கோபுரத்தின் அடுத்த பரிமாணம்

தேவன் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து பல நன்மையான காரியங்களை நமது ரூஹா ஊழியங்களுக்கு செய்துக்கொண்டிருக்கிறார். நம்முடைய ஞாயிறு ஆராதனைகள் ஒவ்வொரு வாரமும் அரும்பாக்கத்திலுள்ள விஜய் பார்க் ஹோட்டலில் வைத்து நடத்திக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு வாரமும் வாடகை செலுத்துவதற்கும், மீடியா பொருட்களை ஏற்றி, இறக்குவதிலும் மிகுந்த சிரமத்திற்குள்ளானோம். ரூஹா ஊழியத்தின் அனைத்து காரியங்களும் ஒரே கூரையின் கீழ் வரும்படி கர்த்தர் நமக்கு ஒரு வாசலை திறந்திருக்கிறார். பணச்செலவை குறைக்கும்படி வடபழனி 100 அடி சாலையில் நான்கு தளமுள்ள கட்டடத்தை வாடகைக்கு எடுத்துள்ளோம். தேவன் 24/7 துதி ஜெப கோபுரத்தை கிருபையாய் கொடுத்திருக்கிறார். இப்பொழுது தற்காலிகமாக, இடம் சிறியதாயிருந்தாலும், அலுவலகத்திற்குள்ளேயே ஞாயிறு ஆராதனைகளை 5 ஆராதனையாக நடத்திக்கொண்டு வருகிறோம். ஒரே இடத்தில் எல்லா ஊழியங்களும் நடைபெறுவதால். சிரமங்கள் குறைந்திருந்திருக்கிறது. கர்த்தர் சீக்கிரத்தில் அநேக ஆத்துமாக்கள் வந்து தேவனை ஆராதிக்க நமது ஊழியத்திற்கென்று சொந்த இடத்தை கொடுக்கும்படியாகவும் பாரத்தோடு ஜெபித்துக்கொள்ளுங்கள்.
மட்டுமல்லாது நமது ரூஹா துதி ஜெப கோபுரத்தில் தொலைக்காட்சி ஊழியங்கள், ரூஹா சுவாசக் காற்று மாதாந்திர பத்திரிக்கை, On-line Ministries, 24 மணிநேரமும் ஆராதிக்கிற துதி ஜெபமையம், சபை ஊழியங்கள் மற்றும் இதர அலுவலகத்தின் வேலைகளை செய்யபும், தனிப்பட்ட மற்றும் விடுதலைக்காக ஜெபிக்கவருகிறவர்களுக்கு ஜெபம், counselling அறைகளும், அமைக்கபட்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த மணிவேளையிலானாலும் ஜெபிக்க, தேவனை ஆராதிக்க வரலாம். 24 மணி நேரமும் நம் ஜெப மையம் திறந்திருக்கும். நாம் சொந்த இடத்திற்கு செல்லும்வரை தேவனை விடுதலையோடு ஆராதிக்க கர்த்தர் கொடுத்த இந்த மகிமையான ஈவிற்க்காய் அவருக்கு கோடி நன்றிகளைச் செலுத்துகிறேன்.

ஃப்ரீடம் வெள்ளிவிழா

கர்த்தருடைய ஆவி எங்கு உண்டோ அங்கு விடுதலை உண்டு. கர்த்தர் நம் ஊழியத்திற்கு தந்த, மாபெரும் தரிசனமான ஃபீரிடம் இதுவரை பல பட்டணங்களிலும், தேசங்களிலும் பயணித்து, தேவன் தரும் விடுதலையை ஜனங்களுக்கு கொடுத்து வருகிறது. 2007ஆம் ஆண்டு முதல் கடந்த 2018 ஆண்டு வரை 24 ஃப்ரீடம் பெருவிழாக்களை இந்தியாவிலும் மற்றும் வெளி தேசங்களிலும் நடத்த கர்த்தர் பாராட்டின கிருபைக்காக ஸ்தோத்தரிக்கிறேன்.

ரூஹா ஊழியத்தின் முதுகெலும்பாய் இருக்கிற ஃப்ரீடம் தரிசனப் பெருவிழா வெள்ளிவிழாவாக இம்மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் இந்தியாவின் “0” பாயிண்ட் என்று அழைக்கப்படும் மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள நாக்பூரில் நடத்தவுள்ளோம். இப்பெருவிழாக்களின் மூலமாய் இரட்சிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்காய், நான் கர்த்தரைத் துதிக்கிறேன். இதற்கு மூலக்காரணமாய் இருந்தது ஃப்ரீடம் தரிசனப் பங்காளர்களாகிய நீங்களே. இத்தரிசனத்தின் பாரத்தை நன்கு உணர்ந்த நீங்கள் இதற்காக தோள்கொடுக்கமுடியும். உங்களின் இடைவிடாத ஜெபங்களும், உண்மையான காணிக்கைகளும் கணக்கற்ற ஆத்துமாக்களை அறுவடையாய் தந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளாய் இவ்வூழியத்தை தாங்கி, இந்த பெரிய தரிசனத்தில் கரம் கோர்த்து நடக்க கிருபை பாராட்டின உங்களுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டங்களுக்காய் ஜெபித்துக் கொள்ளுங்கள். சென்னையிலிருந்து ஒரு சேனையாய் நாங்கள் வட இந்தியாவிற்கு சென்று 25வது ஃப்ரீடம் பெருவிழாவினை நடத்த இருக்கிறோம். வருகிற ஒவ்வொரு ஆத்துமாக்களும் கர்த்தருடைய அபிஷேகத்தையும், சுகத்தையும், விடுதலையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி ஜெபித்துக் கொள்ளுங்கள்.

ரூஹா ஊழியங்களின் 13 ஆண்டு நிறைவு

கர்த்தருடைய வல்லமையுள்ள புயமும், அவருடைய பாராக்கிரமமுள்ள கரமும் இம்மட்டும் நம் ரூஹா ஊழியங்களோடு இருந்து, மகத்தான காரியங்களை செய்ததற்காக தேவனுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை செலுத்துகிறேன். எங்கள் தாழ்வில் எங்களை நினைத்தருளி, எண்ணற்ற ஊழியங்கள் மூலமாய் ஆத்துமாக்களை சந்தித்துக்கொண்டிருக்கிற தேவ அன்பிற்காய் தேவனை மனதார துதிக்கிறேன். 12 ஆண்டுகள் வேதாகமத்தின் அடிப்படையில் நிறைவின் அடையாளமாய் இருக்கிறது. 13 என்பது புதிய துவக்கத்தின் அடையாளமாகும். கானானை நோக்கி தரிசனமாக சென்றுக்கொண்டிருந்த பாதையில் தடையாய் நின்ற எரிகோ தகர்த்தெரிவதற்காக தேவனுடைய வழிநடத்துதலின்படி (6 நாள் 6 முறையும் 7வது நாள் 6 முறையும் ஆக 12 முறை அமைதியாக சுற்றிவந்தனர் 13வது முறை மகாபெரிய ஆர்ப்பரிப்போடும், துதியோடும், எக்காளச்சத்தத்தோடும் சுற்றிவரும் போது எரிகோ மதில்கள் தகர்க்கப்பட்டு மாபெரும் ஜெயத்தை எடுத்தார்கள். அது போல நமது ரூஹா ஊழியத்தின் 13வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நம்மையும் தேசத்திலுள்ள எரிகோ மதில்களையெல்லாம் தகர்க்கும்படியாக எக்காளச் சத்தத்தோடும் துதியோடும் இந்தியா தேசம் எங்கும் செல்லும்படியாக கர்த்தர் கிருபையளித்திருக்கிறார். இதுவரை ரூஹா ஊழியங்களுக்காய் உங்கள் பாரம் நிறைந்த ஜெபத்தோடும், காணிக்கைகளினாலும் தாங்கிய உங்களை கர்த்தர் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.

உங்கள் அன்பு சகோதரன்

போதகர் ஆல்வின் தாமஸ்

வாக்குத்தத்தச் செய்தி – நன்மை பெற்ற நாசரேத் – போதகர் ஆல்வின் தாமஸ் – Dec., 2018

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,

ஆண்டவரும் இரட்கருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இந்த தீர்க்கதரிசன செய்தியை படிப்பதற்கு நீங்கள் எவ்வளவு ஆவலாயிருக்கிறீர்களோ.. அந்த அளவுக்கு நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். காரணம் இந்த செய்தியானது வெளிப்பாடு நிறைந்தது. இது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கர்த்தர் உங்களை எவ்வாறாக உயர்த்தி வைக்கப்போகிறார் என்பதைக் காண்பித்து, உங்களை குதுகலப்படுத்தப்போகிறது.

கர்த்தர் சிறியவனைப் புழுதியிலிருந்து உயர்த்தி, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் (1 சாமுவேல் 2:8)

நம்முடைய தேவன் ஒருவரையும் அற்பமாக எண்ணுவதில்லை. மாறாக, அவர் தூக்கி விடுகிறவராயிருக்கிறார். உலகமானது உங்களுக்கு போதிய ஞானமில்லை, நீங்கள் கடனாளி, வியாதிக்காரன், நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதே கடினம் என்று ஏளனமாக பேசி உங்களை ஒதுக்கியிருக்கலாம். சோர்ந்து போகாதிருங்கள்.  இயேசுகிறிஸ்து முப்பது வயதைக் கடந்து ஊழியத்திற்கென்று வந்தபோது, ஜனங்கள் அவருடைய சொந்த ஊரின் நிமித்தம் அவரை குறைத்து மதிப்பிட்டார்கள். ஆம், இயேசுகிறிஸ்து நாசரேத் என்னும் ஊரிலிருந்து வந்தாரென்று சொன்னபோது யூதர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. காரணம் நாசரேத், கலிலியேயா நாட்டிலுள்ள ஒரு சிறிய கிராமம்.

பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப் பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். (யோவான் 1:45,46)

சீஷனாகிய பிலிப்பு, நாத்தான்வேல் என்பவரிடம் வந்து, நாம் வாசிக்கிற நியாயப்பிரமாணத்திலே தீர்க்கதரிசிகள் முன்மொழிந்த மேசியாவைக்கண்டேன். அவர் நாசரேத்தை சேர்ந்த யோசேப்பு என்வரின் மகன் என்று இயேசுகிறிஸ்துவை குறித்து, அறிமுகப்படுத்தும்போது, உடனடியாக நாத்தான்வேல்,”நாசரேத்திலிருந்து நன்மையா?” என்று ஆச்சரியப்பட்டு கேட்கிறார்.

நியாயப்பிரமாண புஸ்தகத்தில் அதாவது பழைய ஏற்பாட்டில் அநேக இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக இயேசு பிறந்த பெத்லகேம், ஊழியம் செய்த எருசலேம், எரிகோ, எகிப்து, தீரு சீதோன் என அநேக இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் நாசரேத் ஊரைப்பற்றி எதுவும் எழுதப்படவில்லை. நியாயப்பிரமாண புஸ்தகத்தில் தேறின நாத்தான்வேல், இப்படியாக கேள்வி எழுப்புகிறார்.  ஆனால் இயேசு அந்த ஊரில்தான் வளர்க்கப்பட்டார். தனது இளமை காலங்கள் முழுவதையும் நாசரேத் ஊரிலே செலவிட்டார். ஆகவே நாசரேத் ஊரின் நிமித்தமாக இயேசுவின் மதிப்பானது கேள்விகேட்கப்பட்டது.

மதிப்பில்லாத நாசரேத் ஊரானது, இயேசுகிறிஸ்துவினிமித்தம் சரித்திரத்தில் இடம் பெற்றது. ஆகவே எனக்கன்பானவர்களே, நான் எளிய குடும்பத்தில் பிறந்து விட்டேன்,  எனக்கு பணம் இல்லை, என்னால் வாழ்கையில் உயரமுடியுமா? என் சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது, எனக்கு யார் உதவி செய்வார்கள் என்று கவலைபட்டு கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் கலங்கத்தேவையேயில்லை. இயேசு உங்களை உயர்த்த போதுமானவராயிருக்கிறார். ஆகவே நீங்கள் தங்க தட்டிலும், சில்வர் ஸ்பூனிலும் சாப்பிட்டிருக்க வேண்டும் என்றல்ல.. கிறிஸ்து உங்களோடு இருந்தாலே போதும் நீங்கள் விலைமதிப்புள்ளவர்களாய் மாறிவிடுவீர்கள்.

நீங்கள் மறக்கப்படுவதில்லை

நாசரேத் ஊரானது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கே அடைப்பெயராக மாற்றப்பட்டது. ஆம் இயேசுவே நான் நாசரேத்தைச் சேர்ந்தவன் என்று தம் வாயினால் கூறியிருக்கிறார். கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட யூதர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்த சவுல் என்பவன், தமஸ்கு பட்டணத்திற்கு செல்லும் வழியில் திடீரென்று வானத்திலிருந்து வந்த பேரொளி தாக்கி கீழே விழுந்துவிட்டார். அப்பொழுது சவுலே, சவுலே ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்? என்ற கேள்வி வானத்திலிருந்து கேட்கப்பட்டது. நீ யார்? என்று சவுல் கேட்க, அந்த சத்தமானது, நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசுநானே என்று பதிலளித்தது.

நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது; சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே என்றார் ( அப். 22:8)

தீர்க்கதரிசிகளும் நாசரேத்தை மறந்து போனார்கள். ஆனால் இயேசுகிறிஸ்து தான் நசரேயன் என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொண்டார். இயேசு இறந்தபிறகு,  அவருடைய கல்லறைக்கு சுகந்த வர்க்கமிடும்படி சென்ற மூன்று பெண்களைப்பார்த்து, வெள்யைங்கி தரித்த தூதன், நசரேயேனாகிய இயேசு உயிர்த்தெழுந்தார் என்றான். (மாற்கு 16:6) இயேசுகிறிஸ்துவை அறைந்த சிலுவை மரத்தின்மேலே “நசரேயனாகிய இயேசு யூதருக்கு ராஜா” என்ற வாசகத்தை எழுதினார்கள். (யோவான் 19:19) அதுமட்டுமல்லாமல், பிசாசுகளும் கூட இயேசு கிறிஸ்துவை நசரேயனாகிய இயேசு என்றே அழைத்தன. (லூக்கா 4:34) பேதுருவும் யோவானும் அலங்கார வாசலண்டையில் பிச்சைஎடுத்துக்கொண்டிருந்த முடவனை, நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எழுந்து நட என்று சொன்னதும், அவன் எழுந்து நடந்தான். (அப்போஸ்தலர் 3:6) இயேசுவின் பெயருக்கு முன்னால் எல்லோராலும் மறக்கப்பட்ட நாசரேத் ஊரை ஞாபகப்படுத்தும்படியாக நசரேயனாகிய இயேசு என்று இயேசுகிறிஸ்து அழைக்கப்பட்டார்.

சிறுவனாகிய தாவீதை, பெற்றெடுத்த தகப்பனே மறந்து போய்விட்டார். சாமுவேல் தீர்க்கதரிசி தைலக்கொம்பை எடுத்து அபிஷேகம் பண்ணுவதற்காக வந்தபோது, உன் பிள்ளைகள் இவ்வளவுதானா? என்று கேட்டபிறகு, எல்லோருக்கும் இளைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று தகப்பனாகிய ஈசாய் கூறுகிறார். சகோதரராலும், தகப்பனாலும் மறக்கப்பட்ட தாவீதை கர்த்தர் உயர்த்தி ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறார். எவ்வளவு பெரிய ஆச்சரியம். ஆம், வாக்கை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர். அவர் எளியவர்களை மகிமையுள்ள சிங்காசனத்தை சுதந்தரிக்கச் செய்கிறார். ஆகவே பிரியமானவர்களே, என் குடும்பத்தினரால், உறவினர்களால் மறக்கப்பட்டேன் என்று புலம்பிக்கொண்டிருக்கிற உங்களை கர்த்தர் மறக்கவில்லை. உங்களை மறந்தவர்கள் கண்களுக்கு முன்பாக உங்களை உயர்த்தப்போகிறார்.

எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை (சங்கீதம் 9:18)

நீங்கள் தெரிந்துக்கொள்ளப்பட்டீர்கள்

இயேசுகிறிஸ்து தாம் வளருவதற்கு நாசரேத்தை தெரிந்து கொண்டார். லூக்கா 2:51,52ல் இயேசு நாசரேத்தூரில் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார். இப்போது தம்முடைய வல்லமையுள்ள நாமத்தை மகிமைப்படுத்த உங்களை தெரிந்துக்கொண்டார். ஆம், நான் உங்களைத் தெரிந்துக்கொண்டேன் என்றும், நீங்கள் கனிக்கொடுக்கும்படிக்கு உங்களை ஏற்படுத்தினேன் (யோவான் 15:16) என்று  கூறுகிறார். ஆகவே உங்களை எதற்காக தெரிந்து கொண்டாரோ, அந்த திட்டத்தை உங்கள் மூலமாய் நிறைவேற்றி முடிப்பார்.  39 புஸ்தகத்தில் குறிப்பிடப்படாத நாசரேத்தை தாம் வளர்வதற்கு தெரிந்து கொண்டதைப்போல, தாம் மகிமைப்படுவதற்கு உங்களைத் தெரிந்து கொண்டார்.

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவை களையும் இல்லாதவைகளையும்  தேவன் தெரிந்து கொண்டார். (1 கொரிந்தியர் 1:27,28)

தேவனுடைய தெரிந்துக்கொள்ளுதலை புரிந்துக்கொள்ளவே முடியாது. அது உங்களுக்கும் எனக்கும் புரியாத புதிர். காரணம் அவருடைய அனந்த ஞானத்தை ஒருவராலும் விளங்கிக்கொள்ள முடியாது.

ஒரு கம்பெனியில் வேலை செய்ய தெரிந்த திறமையான, ஞானமுள்ள ஆட்களையே வேலைக்கு எடுப்பார்கள். ஆனால், தேவாதி தேவனின் வேலையை செய்வதற்கு ஒன்றுக்கும் உதவாத, அற்பமாய் எண்ணப்பட்ட உங்களையும் என்னையும் தேவன் தெரிந்துக்கொண்டார். எவ்வளவு பெரிய பாக்கியம். ஆகவே நான் பலவீனமானவன், பைத்தியம், அற்பமானவன் என்று நீங்கள் நினைத்தீர்களென்றால், சந்தோஷப்படுங்கள். கர்த்தர் உங்களைத்தான் தெரிந்துகொண்டார்.

வேதாகமத்தில், எல்கானாவின் மனைவியாகிய அன்னாளுக்கு குழந்தை இல்லாததினால் அவளுடைய சக்காளத்தி பென்னினாளால் மிகவும் அற்பமாக எண்ணப்பட்டாள். சிறியவள் என்று அற்பமாக எண்ணப்பட்ட அன்னாளை கர்த்தர் தெரிந்துக்கொண்டு, சாமுவேலை பரிசாக கொடுத்தார். பென்னினாளுக்கு பிறந்தது குழந்தைகள்தான். ஆனால் கர்த்தர் அன்னாளுக்கு, இஸ்ரவேல் என்ற முழு தேசத்தையும் விசாரிக்கிற கர்த்தருடைய தீர்க்கதரிசியைக் கொடுத்ததுமல்லாமல், கூட ஐந்து பிள்ளைகளை சேர்த்துக்கொடுத்தார்.  ஆம், அவர் சிறியவனுக்கும், எளியவனுக்கும் நீதி செய்வதில் வைராக்கியம் மிகுந்தவர்.

நியாயாதிபதிகள் 11ம் அதிகாரத்தில் யெப்தா என்ற ஒரு மனுஷனைக்குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் ஒரு வேசியின் மகன். ஆகவே அவனுடைய தகப்பனின் புத்திரர்கள் அவனை ஒதுக்கி வைத்திருந்தார்கள். பட்டணத்தை விட்டே வெளியே வெளியேற்றினார்கள். எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டான். ஆனால் அதற்காக யெப்தா சோர்ந்து போகவில்லை. மாறாக இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உறுதியாக பற்றிக்கொண்டான். காலங்கள் உருண்டோடின. யெப்தாவை வேண்டாம் என்று விரட்டினவர்கள், தங்களுக்கு ஆபத்து நேரிட்டபோது, யெப்தாவை தங்களுக்கு தலைவனாக ஏற்படுத்திக் கொண்டார்கள். பின்பு யெப்தா, இஸ்ரவேல் ஜனத்தை நியாயம் விசாரிக்கும் நியாயாதிபதியாய் கர்த்தர் மாற்றினார். உங்களின் கடந்த காலம் மோசமானதாக இருக்கலாம், ஆனால், உங்கள் நிகழ்காலத்தை கர்த்தர் பொறுப் பெடுத்திருக்கிறபடியால், உங்களை கன்மலையின் மேல் உயர்த்துவார்.

மோசே ஒரு கொலைகாரன்தான். ஆனாலும் கர்த்தர் அவனோடு முகமுகமாய் பேசினார். இலட்சணக்கான இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும்படி தலைவனாக ஏற்படுத்தினார். யாக்கோபு ஏமாற்றி ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டவனாயிருந்தாலும், சர்வ வல்லமை யுள்ளவர் அவனோடு உடன்படிக்கை பண்ணினார். அப்போஸ்தலனாகிய பேதுரு இயேசுகிறிஸ்துவை மறுதலித்து, அவரை யாரென்றே தெரியாதென்று சத்தியம் பண்ணினவர்தான், ஆனால் அவனுடைய முதல் பிரசங்கத்திலேயே, மூவாயிரம் பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே அவரால் தெரிந்துக் கொள்ளப்பட்ட உங்களை கர்த்தர் உயர்த்துவது நிச்சயம்.

அன்பான தேவனுடைய பிள்ளைகளே… ஒரு முக்கியமான காரியம் என்னவென்றால், இயேசு நாசரேத்தை தெரிந்து கொண்டு, அங்கே வாசம் பண்ணினார். ஆனால், அந்த ஊரார் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் இயேசு ஊழியம் செய்து வந்த நாட்களில், நாசரேத்தூரில் உள்ள ஜெப ஆலயத்தில் பிரசங்கம் பண்ணும்போது, அவருடைய தெய்வத் தன்மையைக்குறித்து பேசினார்.

ஜெப ஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு, எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்படிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்கு கொண்டு போனார்கள். (லூக்கா 4:28,29)

இயேசு, தாம் மேசியா என்று சொன்னபோது, அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மேலும் அவருடைய வல்லமையைக்குறித்து சந்தேகப்பட்டார்கள்.

தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு; இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாம் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல டைந்தார்கள். அவர்களுடைய அவிசுவாசத்தினி மித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. (மத்தேயு 13:54&58)

சர்வ வல்லமையுள்ள தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படி இவ்வுலகத்திற்கு அனுப்பினார். வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைக்கு அந்நியர்களாகவும், காணியாட்சிக்கு புறம்பானவர்களாகவும், நம்பிக்கையில்லாதவர்களாகவும், தேவனற்றவர்களாகவும் இருந்த உங்களையும் என்னையும் மீட்கும்படியாக பூமியில் மனிதனாய் அவதரித்தார். இப்படிப்பட்ட நல்ல தெய்வத்தின் மேல் முழுவதுமாக சார்ந்துக்கொள்ளுங்கள். நிச்சயம் அவர் உங்களை தலையை உயர்த்தி, உங்களை பிரபுக்களோடும் இராஜாக்களோடும் அமரச் செய்து, மகிமையுள்ள சிங்காசனத்தை சுதந்தரிக்கச் செய்வார்.

இதயம் திறந்து உங்களுடன்…

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,

நமக்காய் மண்ணில் உதித்து, நம்மை இரட்சிக்க வந்த நமது ஆண்டவர் நாதராம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு என் அன்பின் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

வருடத்தின் கடைசிக்கு வந்துவிட்டோம். இந்த ஆண்டு முழுவதும் கர்த்தர் நமக்கு செய்த எண்ணிலடங்கா அற்புதங்கள், அதிசயங்களை நினைத்து பார்த்து தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய நேரம் இது. தடைகள், எதிர்ப்புகள், பிரச்சனைகள் எத்தனை வந்தாலும் அவைகளை மேற்கொள்ள கிருபை கொடுத்தவரை முழு இருதயத்தோடு நன்றிகளை ஏறெடுத்த துதிப்போம், ஆராதிப்போம்.

பல தடைகளைத் தாண்டி ரூஹா ஊழியங்களையும், தேவன் நமக்கு ஆச்சரியமாக கொடுத்த ஊழியங்களையும், இடப்பற்றாக்குறையின் மத்தியிலும் மகிமையான கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ரூஹா தரிசனத்தின் மூலமாக இலட்சகணக்கான ஆத்துமாக்களுக்கு கொண்டு செல்ல, கிருபை பாராட்டியிருக்கிறார். இக்கடிதத்தை எழுதுகிற வேளையில் கடந்த சில நாட்களுக்கு முன் கஜா புயலினால் தமிழகத்தில் பாதிக்கபட்ட ஆறு மாவட்டங்களுக்கு நெசா தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்று, அத்தியாவசிய உதவிகளை வழங்கிட ஆயத்தமாகி வருகிறேன். வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கின்ற விவசாயிகளுக்கும், ஆதரவற்றோர்க்கும் நேரில் சென்று ஆறுதல் கூறி, தேற்றி ஜெபித்து புறப்பட்டு வருகிறேன்.

மேலும் பாதிக்கப்பட்ட அநேக சபைகளுக்கு கர்த்தருக்கு சித்தமானால் தடையில்லாமல் கர்த்தரை ஆராதிக்க எரேமியா 31:4ன்படி ஆலயத்தை புதுப்பித்து தர தீர்மானித்துள்ளோம். எங்களுடன் கைக்கோர்த்து இவ்வூழியத்தை நிறைவேற்ற 9884498777 என்கிற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அகமதாபாத் ஊழியங்கள்

கடந்த நவம்பர் மாதம் 8,9 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கிட்டதட்ட 1200 வாலிபர்கள் பங்கேற்ற விசேஷித்த முகாமில் கலந்து கொண்டு கர்த்தருக்காக எழும்பவும், ஊழியம் செய்யவும் ஊக்குவிக்க தேவன் கிருபை பாராட்டினார். நூற்றுக்கணக்கான வாலிபர்கள் தேவனுடைய ஊழியத்தை செய்ய கண்ணீரோடு ஒப்புக்கொடுத்த காட்சி உள்ளத்தை உருக்கினது. மேலும் அகமதாபாத் பட்டணத்தின் மையத்தில் உள்ள மணிநகர் என்ற இடத்தில் ஙிகிஸிஷிளி என்கிற பின்மாரி எழுப்புதல் கூட்டங்களில் கலந்துக்கொள்ள தேவன் கிருபை பாராட்டினார். கூட்டத்திற்கு விரோதமாக எதிர்ப்புகளும் தடைகளும் பல வழிகளில் எழும்பிய போதும், உங்களைப்போன்ற அநேக திறப்பின்வாசல் ஜெப வீரர்களின் ஊக்கமான ஜெபத்தைக் கர்த்தர் கேட்டு கூட்டத்தை ஜெயமாய் நடத்திக் கொடுத்ததுமன்றி அற்புத அடையாளங்களின் மூலமாகவும் தமது வார்த்தையை உறுதிபடுத்தினார். (மேலும் விபரங்கட்கு 12,13 ஆகிய பக்கங்களை பார்க்கவும்) அநேக சிறுவர்களும், வாலிபர்களும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய தங்களை ஒப்புக்கொடுத்தனர்.

நாக்பூர் ப்ரீடம்

கர்த்தருடைய பெரிதான கிருபையால் வருகிற பிப்ரவரி மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் நாக்பூரில் ப்ரீடம் துதி ஆராதனை அற்புத பெருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. இந்தியாவின் மையப்பகுதியாம் நாக்பூர் பட்டணத்தின் எழுப்புதல் இந்தியாவிற்கே எழுப்புதல் என்கிற ஆவியானவரின் நிச்சயமான வழிநடத்துதலின் பேரில் ஒரு பெரிய குழுவாக செல்ல இருக்கிறோம். கர்த்தர் ஒரு பெரிய தாக்கத்தை, அந்நாட்களில் ரூஹா ஊழியத்தின் மூலமாக அளவில்லாமல் ஊற்ற உங்கள் ஜெபங்களில் தினமும் நினைத்துக்கொள்ளுங்கள். மேலும் அடுத்த வருடம் முழுவதும் எழுப்புதல் கூட்டங்களை மாவட்டங்கள், பட்டணங்கள் தோறும் நடத்த தீர்மானித்திருக்கிறோம்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆராதனைகள்

நமது ரூஹா ஊழியத்தின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆராதனைகள் விஜய் பார்க் ஹோட்டலில் வைத்து நடைபெற இருக்கிறது. ஆராதனைகளின் நேரத்தைக் குறித்ததான தகவல்களை பெற்றுக்கொள்ள 8148888777 மற்றும் 044&61328777 என்கிற தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

ஆழ்ந்த இரங்கல்

கர்த்தரின் எழுத்தாணியாக தன்னை அர்பணித்துக்கொண்ட என் ஆவிக்குரிய தகப்பனாகிய டாக்டர் சாம் ஜெபத்துரை அவர்கள் கடந்த மாதம் 31ம்தேதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார்கள். கர்த்தர் என்னை அவர்களின் கையில் ஏழு வருடங்கள் வனைந்தார். அவரோடு இணைந்து ஊழியம் செய்த நாட்கள், அவரோடு செலவு செய்த நேரங்கள் என் வாழ்க்கையின் பொன்னான தருணம் என்றே சொல்லலாம். நமது ரூஹா ஊழியத்தை துவக்கி வைத்தவர் அண்ணன் அவர்கள்தான்.
கர்த்தருடைய கிருபையால் அக்டோபர் மாதத்தில் அமெரிக்க ஊழியங்களுக்கு செல்வதற்கு முன்பாக அண்ணன் அவர்களை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள தேவன் கிருபை பாராட்டினார். இதற்கிடையில் நவம்பர் 16தேதி ஒரு நாளுக்காக அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டு திரும்புகிற வேளையிலும் அவரோடு சந்தோஷமாக பேசி மகிழ்ந்த தருணங்கள் மறக்க முடியாது.

அவர் இறக்கும் அன்றுதான் அமெரிக்க ஊழியங்களை முடித்து சென்னை திரும்பிக் கொண்டி ருந்தேன். நேரடியாக அவருடைய அடக்க ஆராதனையில் கலந்துக் கொள்ள கர்த்தர் கொடுத்த ஈவுக்காக ஸ்தோத்திரம். அவர் அவரை பிரிந்திருக்கும் அன்பு பிள்ளை களையும், பேரக்குழந்தைகளை யும், ஏலிம் திருச்சபை மற்றும் அன்றன்றுள்ள அப்பம் குடும்பத் தினரையும் கர்த்தர் தமது ஆறுதலினால் நிரப்புவாராக.

உங்கள் அன்பு சகோதரன்
போதகர். ஆல்வின் தாமஸ்

வாக்குத்தத்தச் செய்தி – உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் – போதகர் ஆல்வின் தாமஸ்

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,

ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் தேவனுடைய பிள்ளையாகவும், இந்த உலகத்தின் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதிகளாகவும் இருக்கிறீர்கள். கர்த்தர் உங்களுக்கு பிசாசின் சகல வல்லமையையும் மேற்கொள்கிறதற்கான அதிகாரத்தை வாக்குத்தத்தமாக கொடுத்திருந்தார். ஆகவே நீங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, ஜெயமுள்ள வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று விசுவாசிக்கிறேன்.

இந்த மாதம் கர்த்தர் உங்களை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று வாக்கு பண்ணுகிறார். சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்:
செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஆகாய் 2:23)

பழங்காலத்தில் முத்திரை மோதிரமானது, ஒரு அடையாளச் சின்னமாக விளங்கியது. அரசர்களின் கையெழுத்திற்கு பதிலாக அவர்கள் அணிந்திருந்த முத்திரை மோதிரத்தை உருக்கிய மெழுகினாலோ அல்லது மிருதுவான களிமண் அழுத்தியோ அதன் அடையாளத்தை எடுத்து, தேசமெங்கும் செல்லுகிற அந்த சுற்றரிக்கை தாளில் முத்திரையாக வைப்பார். அதன்பிறகு அந்த சட்டத்தை யாரும் திருத்தவோ, நீக்கவோ இயலாது. ஆம் நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட முத்திரை மோதிரம். நீங்கள் முடிவெடுக்கிற காரியத்தை யாராலும் மாற்ற முடியாது. உங்களை வெறும் அழகுக்காக மாத்திரமல்ல, மாறாக அநேக ஜனங்களை ஆசீர்வதிக்கிறதற்கு கர்த்தர் உங்களை ஒரு முத்திரையாக வைத்திருக்கிறார்.

பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்து தேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான் (ஆதியாகமம் 41:42,43)

அடிமையாய் வாழ்ந்த யோசேப்பை, திடீரென்று ஆளப்போகிறவனாய் மாற்றிவிட்டார். பார்வோனின் கனவுக்கு அர்த்தத்தையும், செய்ய வேண்டிய காரியங்களையும் அறிவித்தபோது, பார்வோன் யோசேப்பு அதிகாரத்தை கொடுக்கும் விதமாக தன் கையிலுள்ள முத்திரை மோதிரத்தை கழற்றி, யோசேப்புக்கு அணிவித்தான். இதன்பின்பு எகிப்தின் முழு அதிகாரமும் யோசேப்பின் கைக்கு மாறியது. யோசேப்பின் உத்தரவில்லாமல் தன் கையையாவது காலையாவது ஒருவனும் அசைக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்படிப்பட்ட மேன்மையான முத்திரை மோதிரமாக கர்த்தர் உங்களை மாற்றப்போகிறார்.

பரிசுத்த ஆவியானவரின் முத்திரை

நீங்கள் சாலையில் நடக்கும்போது, அநேக காகிதத்துண்டுகள் சிதறிக்கிடப்பதை பார்த்திருப்பீர்கள். அதை யாரும் கண்டுக்கொள்வதில்லை. ஆனால் நமது இந்திய அரசாங்கத்தின் ரூபாய் நோட்டுகள் கீழே கிடந்தால் அதை ஓடிப்போய் எடுத்துக்கொள்வதுண்டு. இரண்டுமே காகிதம்தான். ஆனால் அதில் அரசாங்கத்தின் முத்திரை போடப்பட்டிருப்பதால் அது விலைமதிப்புள்ளதாய் மாறிவிடுகிறது.

அதுபோல, நீங்கள் வெறும் காகிதம்தான். ஆனால் உங்களை பரிசுத்த ஆவியானர் முத்தரித்திருக்கிறார். ஆகவே நீங்கள் விலைமதிப்பு மிக்கவர்கள். எப்போது நீங்கள் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டீர்களோ.. அப்பொழுதே நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரைபோடப்பட்டீர்கள்.

நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைப்போடப் பட்டீர்கள். (எபேசியர் 1:13,14)

நீங்கள் உங்களுடையவர்களல்ல. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள். ஏனென்றால் உங்கள் மீது முத்திரைபோட்டிருக்கிறார். ஒன்றுக்கு உதவாத உங்களையும் என்னையும், புது மனுஷனாய் மாற்றி, அவருடைய பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்பட்டது காரணம், நீங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இந்த உலகத்தில் இருப்பதற்காகவே.. ஆகவே அவர் உங்களுக்குள் இருந்து, அவர் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை உங்களைக் கொண்டு நிறைவேற்ற உங்களை இன்றே அர்பணியுங்கள்.

அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே.. என்று அழைக்கப் பட்ட விழுந்து போன தூதனாகிய லூசிபர் நீ விசித்திரமாய்ச் செய்யப் பட்ட முத்திரை மோதிரம் என்று பாராட்டப்பட்டவன். ஆனால் அவன் பெற்ற முத்திரையை உடைத்துப் போட்டப்படியால் கீழே தள்ளப்பட்டான்.
நீங்களும் கர்த்தர் உங்களுக்கு கொடுத்த பரிசுத்த ஆவியானவர் என்ற முத்திரையை எடுத்துப்போடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப்பெற்ற பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தாதிருங்கள். (எபேசியர் 4:30) பரிசுத்த ஆவியானவர் மிகவும் ஒழுங்கானவர். அவருக்கு பிரியமில்லாத காரியங்களை நீங்கள் செய்யும்போது, மிகவும் துக்கப்பட்டு, உங்களை விட்டு அமைதியாக விலகிவிடுவார். ஆகவே உங்கள் சுதந்திரத்தின் அச்சாரமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரை உங்கள் பரிசுத்த வாழ்க்கை மூலமாக கனப்படுத்துங்கள்.

அன்பின் முத்திரை

கல்யாண வீடுகளில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மோதிரத்தை அணிந்துக்கொள்ளுவார்கள். காரணம் இது ஒரு அன்பிற்கு அடையாளமாய் இருக்கிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்கள் மீது ஒரு அன்பின் முத்திரையை போட்டிருக்கிறார். இந்த அன்பின் முத்திரையை போட்டத்தின் நிமித்தம் நீங்கள் அவருடனே கூட சேர்ந்து ஆளுகிறவர்களாக மாறிவிட்டீர்கள்.

லூக்கா 15ம் அதிகாரத்தில், இளையக்குமாரன் தகப்பனிடத்திலிருந்து பிரிந்து போய், சொத்துகளையெல்லாம் அழித்து, ஊதாரித்தனமாக செலவழித்து, பின்பு உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை வந்தபோது, தகப்பனிடத்தில் திரும்பி வருகிறார். அவன் தூரத்தில் வரும்போதே தகப்பன் அவனைக் கண்டு, கழுத்தைக்கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து தன்னிடத்தில் சேர்த்துக்கொண்டது மாத்திரமல்ல.. அதற்கு மேலான ஒரு காரியத்தை செய்கிறார். அப்பொழுது தகப்பன் தன் ஊழிக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். (லூக்கா 15:22,23)

“உம்முடைய கூலிக்காரனில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்” என்று கெஞ்சி வந்து நின்றவனுக்கு, கைக்கு மோதிரத்தை அணிவித்து, திரும்பவும் மகன் என்ற அந்தஸ்த்தைக் கொடுத்து, கனப்படுத்துகிறார். ஆம், திரும்பி வந்த இளைய குமாரனுக்காக கொழுத்தக் கன்றை அடித்து, பெரிய விருந்தையே ஏற்பாடு செய்கிறார். அந்த தகப்பனுக்கு எத்தனை பெரிய அன்பு!

ஆம், பரம தகப்பனை விட்டு நீங்கள் வெகுதூரம் சென்றாலும், மனந்திரும்பி வரும்போது, உங்களை உதறிதள்ளாமல், தம் அன்பின் கையிறுகளால் கட்டி அணைத்துக்கொள்கிறார். அநாதி சிநேகத்தால் நான் உன்னை சிநேகித்தேன். காருண்யத்தினால் உன்னை இழுத்துக்கொள்வேன் என்று அவருடைய நேச வார்த்தைகளால் உங்களை நயங்காட்டி அழைக்கிறார். ஒருவேளை நீங்கள் கர்த்தரை விட்டு தூரம் போயிருந்தீர்களென்றால், இந்த இளையக்குமாரனைப் போல திரும்பி வந்துவிடுங்கள். உங்கள்மேல் அன்பின் முத்திரையைப்பதித்து, உங்களை தன்னுடையவர்களாக்கிக்கொள்ள அவர் துடிக்கிறார்.

உன்னதப்பாட்டில், சூலமித்தியாள் தன் நேசரைப்பார்த்து, “நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப் போலவும், புயத்தின்மேல் முத்திரையைப் போலவும் வைத்துக்கொள்ளும்” என்று கெஞ்சுகிறாள். (உன்னதப்பாட்டு 8:6) சிலர் தம்முடைய அன்பை வெளிப்படுத்துவதற்காக அவர்களுடைய உடல்களில் தனக்கு இஷ்டமானவர்களின் பெயர்களை பச்சைக் குத்திக்கொள்ளுகிறார்கள். ஆனால் உங்களை தம்முடைய பிள்ளையாகத் தெரிந்துக் கொண்டவர், உங்களை தன்னுடைய உள்ளங்கையிலே வரைந்து வைத்துள்ளார். (ஏசாயா 49:16) ஆகவே நீங்கள் எனக்கு யாருமில்லை, என்னிடம் அன்பு காட்ட ஒருவரும் இல்லை என்று புலம்பிக்கொண்டிருக்காமல், என் முகத்தை தன்னுடைய உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியோடு ஓடுங்கள்.

பாதுகாப்பின் முத்திரை

என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீருற்றும், முத்தரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய் (உன்னதப்பாட்டு 4:12)

ஆம், நீங்கள் ஒரு முத்திரை போடப்பட்ட கிணறு. இந்த முத்திரையானது பாதுகாப்பிற்கு அடையாளமாய் இருக்கிறது. கர்த்தருடைய சித்தமில்லாமல் ஒருவரும் உங்களை ஒன்றும் செய்யமுடியாது. ஏனென்றால் நீங்கள் அவருடைய பாதுகாப்பின் வளையத்திற்குள் இருக்கிறீர்கள். நீ என்னுடையவன் என்று உங்களைத் தனக்குகென்று சொந்தம் பாராட்டிக்கொண்ட இயேசுகிறிஸ்து, உங்களுக்கு தீங்கு வர அனுமதிப்பாரா? நிச்சயமாக இல்லை. உன்னைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான் என்று உங்களுக்கு ஒரு சேதமும் அணுகாதபடி உங்களை இரவும் பகலும் காத்துக்கொணடிருக்கிறார். உங்கள் குடும்பத்தை சுற்றிலும் இரத்தக்கோட்டைக்குள் மூடி வேலியடைத்திருக்கிறார். உங்களுடைய உடைமைகள் களவு போவதில்லை. உங்களுக்கு விரோதமாக ஒருவனும் கைப்போடுவதில்லை. ஆகவே நான் உன்னதமானவருடைய செட்டைகளின் மறைவின் நிழலில் இருக்கிறேன் என்று பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். அவரே உங்களுக்கு கேடகமும் மகா பெரிய பெலமுமாயிருக்கிறார்.

அதிகாரத்தின் முத்திரை

பிதாவாகிய தேவன் தமது சொந்த குமாரனின் மூலம் பிள்ளை என்கிற அன்பின் முத்திரையைப் போட்டு, என்னுடைய அனுமதி இல்லாமல் உன்னை ஒன்றும் செய்யமுடியாது என்று வைராக்கியத்தின் அடையாளமாக உங்கள் மீது பாதுகாப்பின் முத்திரையையும் தரித்து, எப்பொழுதும் உங்களுடனே இருக்கும்படி, அவர் அனுப்பிய திரியேகரில் ஒருவரான பரிசுத்த அவியானவரால் முத்திரை போடப்பட்டது எதற்காக தெரியுமா? உங்களுக்கு கட்டவும் கட்டவிழ்ப்பதற்கான அதிகாரத்தின் முத்திரையைக் கொடுப்பதற்காகத்தான்.
ஆம், கர்த்தர் உங்களை அதிகாரத்தின் முத்திரையாக பயன்படுத்தப்போகிறார். நீங்கள் எதன் மேல் அதிகாரத்தை செலுத்துகிறீர்களோ.. அது உங்களுக்கு கீழ்படியும். உங்களுடைய வாயின் வார்த்தைகளை கர்த்தர் கனப்படுத்தப்போகிறார். இந்த அதிகாரமானது திரியேக தேவனைக்குறித்ததான வெளிப்பாடு மிகவும் அவசியம். இந்த வெளிப்பாடானது தேவன் நமக்கு ஈவாகக்கொடுத்த சத்திய வார்த்தையிலிருந்து வெளிப்படுத்தப்படுகிறது. அதுவே உங்களுக்கு அதிகாரத்தைக் கொண்டுவருகிறது. ஆம், மத்தேயு 16ம் அதிகாரத்தில் இயேசு, தம்முடைய சீஷர்களை நோக்கி, நீங்கள் என்னை யார்? என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சீமோன் பேதுரு, நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சற்றும் தாமதிக்காமல் பதிலளித்தார்.

இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வ தில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத்தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார் (மத்தேயு 16:17&19)

மாம்சமும் இரத்தமும் உனக்கு இதை வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற பிதா உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால் இப்படி சொல்கிறாய் என்று சொல்லி, பரலோக ராஜ்யத்தின் திறவுகோலை பேதுருவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து, பரலோகத்திற்கும் பூலோகத்திற்குமான அதிகாரத்தைக் கொடுக்கிறார். ஆகவே பேதுரு, அலங்கார வாசலண்டையில் உட்கார்ந்திருந்த முடவனிடம், என்னிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறேன் என்று சொல்லி, இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் மேல் உள்ள அதிகாரத்தில் அவனை எழுப்பிவிட்டான். பவுலின் அதிகாரம் நிறைந்த முதல் பிரசங்கத்தைக்கேட்டு மூவாயிரம் பேர் தன்னை கிறிஸ்துவுக்கென்று அர்பணித்தார்கள். அதுமட்டுமா.. பவுலின் நிழல் பட்டவர்கள் சொஸ்தமடைந்தார்கள். ஆம், தேவனைப்பற்றிய வெளிப்பாட்டைக்கொண்டவனுக்கு அதிகாரத்தின் முத்திரையைக் கொடுக்கிறார்.

தேவன் யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவருடைய மகத்துவங்கள் என்ன? என்பதை அறிந்துக் கொள்ளும்போது, நீங்கள் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும். நீங்கள் ஒருவரைப்பற்றி முழுவதுமாக அறிந்திருக்கும்போது, அந்த நபருடன் அதிக நேரம் செலவிடுகிறீர்கள். அவரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறீர்கள். அதேபோலத்தான் தேவனோடு அதிக நேரம் ஜெபத்திலும் வேதவாசிப்பிலும், வேதத்தை தியானிப்பதிலும் நீங்கள் செலவிடும்போது, அவர் உங்களோடு சத்தியத்தின் மூலமாக உங்களுக்கு தன்னைக் குறித்த குணாதிசயங்களை வெளிப்பாடாக கொடுக்கிறார். தன்னுடைய நாமத்தின் மகத்துவத்தை கற்றுத்தருகிறார். மறைக்கப்பட்ட இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.

தானியேல் எனும் வாலிபன், ராஜாவின் கட்டளையை மீறி, இஸ்ரவேலுக்கு நேராக பலகணிகளைத்திறந்து வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி, ஒவ்வொரு நாளும் மூன்று வேளையும் ஜெபம் பண்ணினான். இதனிமித்தம் அவனை சிங்கக்கெபியில் தூக்கிப்போடப்பட்டாலும், தானியேல் ஆராதிக்கிற சர்வ வல்லமையுள்ள தேவன் அவனைத் தப்புவித்து பாதுகாத்தார். இது சாதாரண காரியமல்ல… தேவன்மேல் இருந்த பக்தி வைராக்கியம். இதனால் கர்த்தருடைய ஆவியானவர் விசேஷ விதமாக தானியேல் இருந்தார். தானியேல் நாட்களில் வாழ்ந்த அனைத்து ராஜாக்களும் தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருக்கிறது என்று கண்டு, அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்தினார்கள். ஒருமுறை ராஜாவின் கனவையும் கூறி, அதற்கான அர்த்தத்தையும் தானியேல் வெளிப்படுத்தினார். காரணம், தானியேலும் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கும் இடையேயான உறவு வலுவாயிருந்தது.
தினமும் அதிகாலையில் எழுந்து, தேவனைத் தேடுங்கள். நிச்சயம் அவர் உங்களோடே கூட இருந்து பயங்கரமான காரியங்களைச் செய்வார். அதற்காகத்தான் உங்கள்மேல் முத்திரையைப்பதித்து, அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். ஆகவே அதிகாரத்தைப் பயன்படுத்தி, கிறிஸ்துவின் போர்சேவகனாய் வலம் வாருங்கள். கர்த்தர் தம்முடைய வல்லமையுள்ள நாமத்தை உங்கள் மூலமாய் மகிமைப்படுத்துவார்.

இதயம் திறந்து உங்களுடன்…

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,

சகல கிருபையும் பொருந்திய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே உங்களை வாழ்த்துகிறேன். கடந்த பத்துமாதங்கள் உங்களையும் என்னையும் தம்முடைய மிகுந்த கிருபையினால் வழிநடத்தி வந்த தேவனுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துகிறேன். கர்த்தர் தம்முடைய சகல ஆசீர்வாதங்களினாலும் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார். ஆகவே நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவன் என்பதற்கு மாறாக நீங்களே ஆசீர்வாதமாக திகழ்கிறீர்கள். ஆம், சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” என்றே ஆபிரகாமை ஆசீர்வதிக்கிறார். நீங்கள் ஆசீர்வாதத்தின் வாய்க்கால். நீங்கள் போகிற இடமெல்லாம் செழிப்பு, ஆரோக்கியம். நீங்கள் உங்களுக்கு மாத்திரம் ஆசீர்வாதமாக இல்லாமல், மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாயிருக்கிறீர்கள்.

கடந்த மாதம் செப்டம்பர் 22,23 ஆகிய தேதிகளில் நெடுங்குன்றத்தில், எனது நண்பர் பிஷப் கிங்ஸ்லி (சுகமளிக்கும் சுவிசேஷ பேராலயம்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விடுதலை ஆராதனைக்கூட்டங்களில் துதி ஆராதனை மற்றும் தேவசெய்தி அளிக்க கிருபை பாராட்டினார். அக்டோபர் 29ம் தேதி, பனப்பாக்கம் திறந்த வேதாகம தேவ சபையின் 21ம் ஆண்டு விழாவிலும், திருநின்றவூர் புதுவாழ்வு சாலோம் திருச்சபையின் 14ம் ஆண்டுவிழாவிலும் மற்றும் அக்டோபர் 2ம் தேதி சாலோம் பேராலயத்தின் குடும்ப முகாமிலும் தேவ செய்தியளிக்க கிருபை பாராட்டினார். கர்த்தர் தம்முடைய வார்த்தையைக் கொண்டு வந்திருந்த ஜனங்களோடு, தீர்க்கதரிசனமாக பேசினார். அநேகர் சுகத்தையும் விடுதலையும் பெற்றுக்கொண்டர். மேலும் அக்டோபர் மாதம் முழுவதும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஊழியம் செய்யவும், நன்றி 7ம் பாகத்தை வெளியிடவும் கர்த்தர் கிருபை பாராட்டினார். கர்த்தர் தமது வார்த்தையை ஜனங்களுக்குள்ளே உறுதிபடுத்தி, மகிமையான காரியங்களைச் செய்தார். கர்த்தருடைய நாமத்திற்கே மகிமையை செலுத்துகிறேன்.

வட இந்திய ஊழியங்கள்

வருகிற நவம்பர் 5முதல் 9ம்தேதி வரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 5000 வாலிபர்கள் கலந்து கொள்ளும் க்ஷிவீsவீஷீஸீ மிஸீபீவீணீ வாலிபர் கொண்டாட்டத்தில் துதி ஆராதனை நடத்தி, தேவ செய்தியளிக்க அழைத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து 8 மற்றும் 9ம் தேதிகளில் யிமீsus விவீssவீஷீஸீ சிலீuக்ஷீநீலீ ஏற்பாடு செய்திருக்கிற ஙிகிஸிஷிளி என்ற கூட்டத்திலும் துதி ஆராதனை ஏறெடுத்து, கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்துக்கொள்ள அழைத்திருக்கிறார்கள்.
மேலும் நவம்பர் 15ம் தேதி, “கிரேஸ் தேவசபையின் 21ம் ஆண்டுவிழா” வில் தேவ செய்திளிக்க சபையின் போதகர் ரி.ஷி. பீட்டர் பழனி அவர்கள் அன்போடு அழைத்திருக்கிறார்கள். மேலும் நவம்பர் 16ம் தேதி, அனைத்து திருச்சபையின் ஊழியர்களும், விசுவாசிகளும் இணைந்து நடத்தும் “எழுப்புதல் இரவு ஜெபத்தில்” கர்த்தருடைய ஊழியத்தை செய்ய இருக்கிறேன். கோவூரில் உள்ள மீட்பர் இயேசுகிறிஸ்து திருச்சபையில் இந்த இரவு ஜெபமானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தேசத்தின் எழுப்புதலுக்காக இணைந்து ஜெபிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன். வருகிற 18ம் தேதி, அரும்பாக்கம் ணிசிமி நிஷீறீபீமீஸீ யிuதீவீறீமீமீ சிலீuக்ஷீநீலீ நடத்தும் சீஷீutலீ கிஸீஸீவீஸ்மீக்ஷீsணீக்ஷீஹ் 2018 என்ற வாலிபர் கூடுகையில் தேவ வார்த்தையை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். ஆகவே இக்கூட்டங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். கர்த்தருடைய வார்த்தை விருத்தியடையவும், கர்த்தர் தம்முடைய ஆவியை வருகிற ஜனங்கள்மேல் ஊற்றப்படவும், கர்த்தருக்காய் வைராக்கியமாய் எழும்பவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்.

ரூஹா ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்

அன்பானவர்களே, நமது ரூஹா ஊழியத்திற்கென்று சொந்த இடத்தை வாங்குவதற்காக முயற்சிகளை எடுத்துக்கொண்டு வருகிறோம். இதில் இருக்கிற தடைகள் மற்றும் எதிர்ப்புகள் நீங்கவும், கர்த்தர் அநுகூலமான வழி வாசல்களை திறக்கவும் ஜெபித்துக்கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு முறையாவது ரூஹா ஊழியத்தை உங்கள் தனிப்பட்ட ஜெபித்தில் தாங்கும்படி பட்சமாய் கேட்டுக்கொள்கிறேன். ஆயிரக்கணக் கானோர்க்கு ஆசீர்வாதமாக இருந்து வருகிற இந்த ரூஹா ஊழியத்திற்கு கர்த்தர் செய்யப்போகிற காரியங்களைக் கண்டு, ஜனங்கள் தேவனை மகிமைப்படுத்தப்போகிறார்கள். இதற்கிடையில் கடந்த மாதம் இஸ்ரவேல் தேசத்திற்கு சென்றிருந்தபோது, கர்த்தர் தமிழ்நாட்டிற்காக ஜெபிக்கும்படி ஒரு பாரத்தைக்கொடுத்தார். அதன்படி, ஏற்படுத்தப்பட்ட மிஸீபீவீணீஸீ பிஷீusமீ ஷீயீ றிக்ஷீணீஹ்மீக்ஷீ யீஷீக்ஷீ ணிஸ்மீக்ஷீஹ்ஷீஸீமீ (மிழிபிளிறிணி) நமது 24 மணி நேர துதி ஆராதனை மற்றும் ஜெபமையத்தில் ஆராதனை வீரர்கள் மற்றும் ஜெபவீரர்கள் தொடர்ந்து துதித்துக்கொண்டும், தேசத்திற்காகவும் 24 மணி நேர தொலைபேசி மூலமாக வருகிற ஜெபக்குறிப்புகளுக்காகவும், கடிதங்களுக்காகவும் ஜெபித்துக்கொண்டும் இருக்கிறார்கள். சென்னையிலிருக்கிற தேவ பிள்ளைகள், வாரம் ஒருமுறையாவது நமது ஜெபமையத்தில் வந்து தமிழ்நாட்டிற்காய், இந்திய தேசத்திற்காய் திறப்பிலே நிற்கும்படி அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். உங்களது ஜெப விண்ணப்பங்களை ஜீணீக்ஷீtஸீமீக்ஷீsமீக்ஷீஸ்வீநீமீ@க்ஷீuணீலீ.வீஸீ என்ற மின்னஞ்சல் மூலமாகவும், 8148888777, 044&61328777 என்ற 24 மணி நேர தொலைபேசியை தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம். உங்களுக்கு ஜெபிக்கும்படி நாங்கள் காத்துக்கொண்டிருக்கும். கூப்பிடுகிறதற்கு முன்னே மறுஉத்தரவு அருளுகிற தேவன், உங்கள் ஜெபத்தைக்கேட்டு பதில் செய்வார்.

உங்கள் அன்பு சகோதரன்
போதகர். ஆல்வின் தாமஸ்

இதயம் திறந்து உங்களுடன்…

கிறிஸ்துவுக்குள் மிகவும் அன்பிற்கு இனிய சகோதர சகோதரிகளே,

ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களை வாழ்த்துவதிலே பெரும் மகிழ்ச்சியடைகிறேன். வருடத்தின் ஒன்பது மாதங்கள் உருண்டோடிவிட்டன. இதுவரை உங்களையும் என்னையும் பாதுகாத்து வழிநடத்தி வந்த தேவனை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறேன். அவர் என்மேல் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டு வந்து, என்னைத் தப்புவித்தார் என்ற வார்த்தையின்படி, கர்த்தர் உங்கள் மேல் பிரியமாயிருக்கிறபடியால், உங்கள் குறுகலான நெருக்கமான சூழ்நிலைகளை மாற்றி, விசாலமான வாசல்களை திறக்கப்போகிறார். இந்த ஆண்டு முடிவதற்குள்ளாக நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை தேவன் உங்களுக்கு தர வல்லவராயிருக்கிறார்.

கடந்த மாதத்தில் பாண்டிச்சேரி மற்றும் அடையாறு இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரத்தில் கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொள்ள அழைத்திருந்தார்கள். தேவ ஆவியானவர் மகிமையாய் அசைவாடி, வல்லமையான காரியங்களைச் செய்தார். கர்த்தர் தம்முடைய வசனத்தை உறுதிபடுத்தி, அநேகருக்கு அற்புத சுகத்தையும் விடுதலையையும் கொடுத்தார். தேவன் தம்முடைய பராக்கிரமமான கரத்தால், நம் ரூஹா ஊழியங்கள் மூலமாய் பெரிய காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்.

ஆயின் டெட் & புதிய வருடம் எபிரேய காலண்டரில் 5779 என்கிற புதிய வருஷம் கடந்த செப்டம்பர் 9ல் துவங்கியது. இந்த புதிய வருடத்திற்கு பெயர் ஆயின் டெட். இந்த புதிய வருடத்தை இஸ்ரவேலில் கொண்டாட தேவன் கிருபை செய்தார்.
மேலும் உலக முழுவதும் 185 தேசங்களிலிருந்து வந்த ஆராதனை மற்றும் ஜெப வீரர்கள் கலந்து கொண்ட எருசலேமில் துதி ஆராதனை மற்றும் ஜெப மாநாட்டில் நம் இந்திய தேசத்தின் சார்பாக இந்தியாவின் எழுப்புதலுக்காக அடியேன் துதி ஆராதனையும் ஜெபங்களையும் ஏறெடுத்தேன். இஸ்ரவேல் தேசத்தில் இருந்த நாட்கள் முழுவதும் இடைவிடாமல் ஊழியம் செய்ய கர்த்தர் வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

Tabernacle of Praise and Prayer

கர்த்தர் தம் வாக்கினால் சொன்னதை தம் கரத்தால் நிறைவேற்றுகிறவர். ஆம், 24 மணிநேரமும் இடைவிடாமல் தேவனை ஆராதித்து, தேசத்திற்காக திறப்பில் நின்று மன்றாடுகிற Tabernacle of Praise and Prayer (TOPP) அதாவது, துதி ஜெப கூடாரத்தை உருவாக்கும்படி, அவர் கொடுத்த தரிசனம் இப்பொழுது தொடர்ந்து நடைபெற தேவன் கிருபை பாராட்டியிருக்கிறார். கடந்த மாதம் 1ம் தேதி தமிழ்நாடு பெந்தேகொஸ்தே சபைகளின் தலைவராயிருக்கிற போதகர் சைமன் சேகர் அவர்கள் ஜெபத்துடன் திறந்து வைத்தார்கள். வடபழனி 100 அடி சாலையில் அமைந்துள்ள இந்த ஸ்தலத்தில் இனி ஜெபவீரர்களும், ஆராதனைவீரர்களும் 24 மணி நேரமும் பட்டணத்திற்காகவும் நம்முடைய தமிழ்நாட்டிற்காகவும், தேசம் முழுவதும் மட்டுமல்ல, இஸ்ரவேலின் சமாதானத் திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஜெபம் ஏறெடுக்கப் போகிறார்கள். நீங்களும் சபை பாகுபாடின்றி கலந்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

தாவீது ராஜா இஸ்ரவேலின் தேவனை ஆராதிப்பதற்காக கூடாரத்தை எழுப்பினார், அதையே தேவன் கடைசி நாட்களில் மறுபடியும் கட்டுவேன் என்று சொன்னார். விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் கட்டிக்கொண்டிருக்கிறோம். உங்களுடைய தொலைபேசி, கடிதம், மற்றும் நேரடியாக வருபவர்களின் ஜெப விண்ணப்பங்களை இஸ்ரவேலின் தேவனுடைய பாதத்தில் வைத்து, ரூஹா ஊழியத்தின் ஜெபவீரர்கள் கண்ணீரோடு ஜெபித்துக்கொண்டுவருகிறார்கள். நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது என்ற வேதவாக்கின்படி, இந்த துதி ஜெப கூடாரத்தில் ஏறெடுக்கிற ஜெப விண்ணப்பங்களுக்கு தேவன், ஆம் என்றும் ஆமென் என்றும் நிச்சயமாக பதில் தருவார். உங்கள் ஜெப விண்ணப்பங்களையும் மறவாமல் எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்காக ஜெபிப்பதற்காகவே ஆவலாய் காத்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும் வாரத்தில் ஒரு நாளாவது ஒரு மணிநேரம் துதி ஜெப கூடாரத்திற்கு வந்து ஜெபிக்கும்படி அன்பாய் கேட்டுக்கொள்கிறேன். கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு பதில் கொடுப்பவராய் இருக்கிறார்.

பத்திரிக்கை ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்

இந்த மாதாந்திர பத்திரிக்கை, 2010ம் ஆண்டிலே இந்திய பத்திரிக்கை துறையில் பதிவு செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து, ஆயிரக்கணக் கானோருக்கு ஆசீர்வாதமாக இருந்து வருகிறது. அநேக தடைகள் மத்தியில் தொடர்ந்து அனுப்பி வருகிறோம். உங்களுக்கு தெரிந்த நண்பர் களுக்கும் பத்திரிக்கையை அறிமுகப்படுத்தி வையுங்கள். அநேகருடைய குடும்பத்திற்கு ஆறுதலின் கருவியாக, ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவியாயிருக்கிற இந்த பத்திரிக்கையை உங்கள் வருட சந்தாவை அனுப்பி தாங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் உங்களது ஜெபக்குறிப்புகள் மற்றும் சாட்சிகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். partnerservice@ruah.in என்ற மின்னஞ்சலிலும் அனுப்பலாம். ரூஹா ஊழியத்தின் 24 மணிநேர தொலைபேசி எண்கள் 044&61328777, 8148888777